கடத்தப்பட்ட
வெள்ளை நாகம்
காயங்களுடன் கண்டுபிடிப்பு
தெஹிவளை
மிருகக்காட்சி சாலையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டிருந்த
வெள்ளை நாகம்
மீண்டும் கிடைக்கப்
பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
குறித்த
நாகபாம்பை பையொன்றில்
இட்டு இன்று
காலை மிருகக்
காட்சிச்சாலையில் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும்
எனினும் நாகப்
பாம்பின் உடலில்
சிறிய காயம்
ஏற்பட்டுள்ள போதும், உயிராபத்து ஏற்படவில்லை எனவும்
தெரிவிக்கப்படுகின்றது.
அடையாளம்
தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்ட நாகப் பாம்பு,
பறவைகள் காட்சிக்
கூடத்திற்கு அருகில் இருந்து இன்று காலை
மீட்கப்பட்டது.
இரவு
நேரத்தில் குறித்த
நாகப் பாம்பு
கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த திங்கள்
கிழமை அதிகாலையிலேயே
நாகப் பாம்பு
காணாமல் போயிருந்தமை
உறுதிப்படுத்தப்பட்டது.

0 comments:
Post a Comment