ஊவா மாகாண
சபைத் தேர்தல்
நாளை வர்த்தமானி
அறிவிப்பு
ஊவா
மாகாண சபைத்
தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தமான வர்த்தமானி
அறிவித்தல் நாளை வெளியாகுமெனத் தேர்தல்கள் செயலகம்
அறிவித்துள்ளது.
வர்த்தமானி
அறிவித்தல் வெளிவந்த இரு வாரங்களில் வேட்பு
மனுக்கள் தேர்தல்கள்
ஆணையாளரால் ஏற்றுக்கொள்ளப்படுமெனத் தேர்தல்கள்
செயலக வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
ஊவா
மாகாண சபை
கடந்த 11 ஆம்
திகதி நள்ளிரவுடன்
கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம்மாகாணத்தில்
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
418906 வாக்குகளைப் பெற்று (போனஸ் ஆசனம் 2
உட்பட) 25 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 129144 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களையும்
மக்கள் விடுதலை முன்னணி 14639 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் மலையக மக்கள் முன்னணி
9227 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.

0 comments:
Post a Comment