ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட

முகம்மது இர்பானுக்கு அனுமதி

பாகிஸ்தான் நிர்வாகம் முடிவு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் நடைபெற உள்ளதுஇதனை கருத்தில் கொண்டு பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது இர்பானை ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 ஆகிய போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதிக்க அந்நாட்டு குழு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, முகம்மது இர்பான் செய்தியாளர்களிடம் கூறும்போது,  எதிர்வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக இருக்கும்படி என்னிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளதுஅதற்கு முன்பாக நான் நன்றாக உடற்தகுதி பெறும் வகையில் பயிற்சி மற்றும் தயார் செய்து கொள்ள வேண்டும்இதற்காக ஒரு முறையான அட்டவணையை பாகிஸ்தான் நிர்வாகம் தயாரித்துள்ளது.

அதனடிப்படையில், இனி ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளிலேயே விளையாட முடியும் என தெரிவித்துள்ளார்கடந்த அக்டோபரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்டுகள் நாட்டில் விளையாடியபோது இர்பானுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டதுஅதனை அடுத்து அவர் அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top