தரைவழி தாக்குதலை
விரிவுபடுத்த இராணுவத்துக்கு இஸ்ரேல் உத்தரவு
போரை தீவிரப்படுத்தக்கூடாது
இஸ்ரேலுக்கு ஒபாமா எச்சரிக்கை
காஸாமுனை
மீதான தரைவழி
தாக்குதலை விரிவுபடுத்த
தயாராகும்படி இராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்
என அறிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலுக்கும்,
பாலஸ்தீன ஹமாஸ்
போராளிகளுக்கும் இடையேயான பகைமை, கடந்த இரண்டு
ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விசுவரூபம் எடுத்துள்ளது.
ஹமாஸ் போராளிகள்
ஆட்சி செய்து
வருகிற காஸாமுனை
மீது இஸ்ரேல்
கடந்த 8-ஆம்
திகதி
முதல் போர்
விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்து
பதிலுக்கு
இஸ்ரேல் நகரங்கள்மீது
ஹமாஸ் போராளிகள்
தொடர்ந்து ராக்கெட்
வீச்சு நடத்தி
வருகின்றனர். இருப்பினும் இந்த சண்டையில் அப்பாவி
பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில்
பலரும் அப்பாவி
பொதுமக்கள் என்பது உலகையே கவலைக்கும், அதிர்ச்சிக்கும்
ஆளாக்கி உள்ளது. இஸ்ரேல்
தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை தற்போது
314 ஆகி உள்ளது.
காஸா
நிலவரம் குறித்து
இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கூட்டத்தைக்
கூட்டி ஆலோசனை
நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல்
பிரதமர் பெஞ்சமின்
நேட்டன்யாஹூ, காஸாமுனை மீதான தரைவழி தாக்குதலை
குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவுபடுத்துவதற்கு
தயாராகும்படி அறிவுறுத்தி உள்ளேன். அதற்கு ஏற்றபடி
இராணுவம் தயாராகிறது.
ஹமாஸ்
போராளிகளின் சுரங்கப்பாதைகளை குறிவைத்து
தாக்கும்படி கூறப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையை
ஹமாஸ் போராளிகள்
ஏற்காததையடுத்துத்தான் இஸ்ரேல் தாக்குதல்களை
தீவிரப்படுத்தி உள்ளது. ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து
ராக்கெட் வீச்சு
நடத்தி வருகின்றனர்.
மற்ற எல்லா
வாய்ப்புகளும் அற்றுப்போய்விட்ட நிலையில்தான்,
தாக்குதல் நடவடிக்கையை
தீவிரப்படுத்த வேண்டியதாயிற்று. நாங்கள் வான்வழி, கடல்வழி
தாக்குதல்களை தொடர்ந்து இப்போது தரைவழி தாக்குதல்களை
நடத்தி வருகிறோம்.
காஸா முதல்
இஸ்ரேல் வரையிலான
சுரங்கப் பாதைகளை
குறிவைத்து எங்கள் தாக்குதல் தொடர்கிறது. என்று
கூறியுள்ளார்.
ஆனால்
இஸ்ரேல் தரைவழி
தாக்குதலை விரிவுபடுத்துவதற்கு
அமெரிக்கா கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது
என்று கூறினாலும்,
அதே நேரத்தில்
போரை தீவிரப்படுத்தக்கூடாது
என்று இஸ்ரேலை
ஒபாமா எச்சரித்துள்ளார்.
0 comments:
Post a Comment