கையில் இருக்கும்
கத்தி தங்கத்திலானாது
என்பதற்காக வயிற்றை குத்திக் கொள்வதா?
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
முக்கியஸ்தர்களில் ஒருவரான பொத்துவில்
மஜீத் (முன்னாள்
சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர்) அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் கட்சியின் பிரதித்
தவிசாளர் பதவியிலிருந்தும்
இராஜினாமா செய்துள்ளார்.
இந்த விடயம்
கடந்த வார
கிழக்கிலங்கை முஸ்லிம் அரசியலில் சூடு பிடிக்கத்
தொடங்கியிருந்தது.
தனது
இராஜினாமா தொடர்பில்
அவர் நீண்டதொரு
கடிதத்தை கட்சியின்
செயலாளர் நாயகமான
நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலிக்கு அனுப்பியிருந்ததுடன்
அதனை ஊடகங்களுக்கும்
பகிரங்கப்படுத்தியிருந்தார்.
முஸ்லிம்
காங்கிரஸிலிருந்து எவர் வெளியேறினாலும்
அவர்கள் முதலில்
முன்வைக்கும் குற்றச்சாட்டு கட்சியின் தலைமை சரியில்லை
என்றுதான். அதே பாணியையே மஜீதும் பின்பற்றியுள்ளார்.
ஆனால், இதனை
விட அவரால்
தெரிவிக்கப்பட்டுள்ள பல விடயங்கள்
தொடர்பில் நிச்சயமாக
முஸ்லிம் காங்கிரஸ்
கவனம் செலுத்தி
தன்னைத் திருத்திக்
கொள்ளவும் வேண்டும்..
அண்மைக்
காலமாக முஸ்லிம்
காங்கிரஸ் மீது
முஸ்லிம் அரசியல்
பிரமுகர்களாலும் முஸ்லிம் மக்களாலும் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள், குறைபாடுகளை அவரும்
தனது கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அவர்
குறிப்பிடும் சில விடயங்கள் உடன்பாட்டுக்கு உரியவையாக
இருந்தாலும் அவற்றில் சில தற்கால சூழ்நிலையில்
பொருத்தமற்றவையாகவே காணப்படுகின்றன.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸினால
மட்டுமல்ல.. எந்த ஒரு முஸ்லிம் கட்சியினாலும்
செய்து கொள்ள
முடியாத பல
விடயங்கள் உள்ளன.
இது பலராலும்
புரியப்பட்ட விடயம்.
”பதவிகளைப்
பெற்றுத் தந்த
சமூகத்தின் இருப்பைப் பாதுகாக்காமல், இந்தத் தலைமை,
அரசாங்கத்தில் அமைச்சர் பதவியோடு மட்டும் இருந்தால்
அரசியலில் நிலைத்து
வாழலாம் என்பதற்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் அண்மைக் கால தீர்மானங்களும் நடவடிக்கைகளும்
சாட்சி பகிர்கின்றன”
என்றதொரு குற்றச்சாட்டை
அவர் முன்வைத்துள்ளார்.
இந்த
நாட்டில் முஸ்லிம்களுக்கு
அநீதி, அக்கிரமங்கள்
என்றதொரு நிலைமை
வரும் போது
அதற்காகக் குரல்
கொடுக்க வேண்டியது
முஸ்லிம் காங்கிரஸ்
மட்டும்தான் என்ற யாப்பு எங்கும் எழுதப்படவில்லை.
இந்த விடயத்தில்
அனைத்து முஸ்லிம்
கட்சிகளும் ஏன் அனைத்து முஸ்லிம் எம்.பிக்கள், அமைச்சர்களும்
தங்களாலான பங்களிப்பைச்
செய்ய வேண்டும்
என்பதே பொது
விதியாக இருக்க
வேண்டும். அண்மையில்
இடம்பெற்ற அளுத்கம,
பேருவளை சம்பவங்களின்
போது ஓரிருவரைத்
தவிர அனைத்து
முஸ்லிம் அரசியல்வாதிகளும்
தங்களது சமூகத்துக்காகக்
குரல் கொடுத்திருந்தனர்.
இது கூட
பொதுபல சேனாவுக்கு
ஒரு பிரச்சினையாகவே
மாறியிருந்தது. அதனை அவர்களே தெரிவித்திருந்தனர்.
அதேவேளை,
அண்மையில் முஸ்லிம்களுக்கு
எதிராக இடம்பெற்ற
கலவரங்கள் தொடர்பில்
பல விடங்களை
முஸ்லிம் அரசியல்வாதிகள்
தெரிவித்திருந்தனர். இவ்வாறான நிலைமைகள்
உடன் கட்டுப்படுத்தப்பட
வேண்டும், குற்றவாளிகள்
தண்டிக்கப்பட வேண்டுமென்று எல்லாம் அவர்கள் கூறிக்
கொண்டுதானிருந்தனர். ஆனால் அவர்களது
குரல்கள் செவிடன்
போன்று நடிப்பவர்களின்
காதுகளுக்கு சங்காக இருந்த போது அவர்களால்
என்ன செய்ய
முடியும்?
பதவியோடு
மட்டும் இருந்தால்
அரசியலில் நிலைத்து
வாழலாம் என
மஜீத் தெரிவித்துள்ளார்.
சரி, பதவிகளை
விட்டு வெளியேறினால்
முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? இதற்கான
உறுதிமொழியை எந்தத் தரப்பினரால் அவர்களுக்கு வழங்க
முடியும்? இவர்கள்
அனைவரும் அரசுக்குள்ளே
இருப்பதால்தான் ஏதோ ஒரு சில நல்ல
விடயங்களேனும் சிறிதாக நடக்கின்றன.
முஸ்லிம்
காங்கிரஸ் மட்டுமல்ல...
அரசுடன் உள்ள
ஏனைய முஸ்லிம்
கட்சிகளும்தான். இன்றைய நிலையில் ஒரு ஹக்கீமோ
ஒரு ரிஷாத்தோ
ஓர் அதாவுல்லாஹ்வோ
ஏன் அமைச்சர்
பௌஸி கூட
அரசிலிருந்து விலகுவாரானால் அது பொல்லைக் கொடுத்து
தாங்களும் அடிபட்டு,
சமூகத்துக்கும் அடிவாங்கிக் கொடுப்பதாகவே முடியும்.
இன்றைய
கால கட்டத்தில்
முஸ்லிம் சமூகத்தின்
அரசியல் பலம்
அல்லது அதிகார
பலம் எங்கு
இறங்கு வரிசைக்குச்
செல்கிறதோ அப்போது
நிச்சயமாக முஸ்லிம்களுக்கு
எதிரான செயற்பாடுகள்
அங்கு ஏறு
வரிசைக்கு விரைந்து
செல்லும் என்பதே
உண்மை.
மேலும்,
பொத்துவில் மஜீத் தனது கடிதத்தில் இவ்வாறும்
தெரிவித்துள்ளார். ”முஸ்லிம்களுக்கெதிராக நடக்கும் அநியாயங்களுக்கு குரல் கொடுக்க
வந்த கட்சியென்றால்,
தமிழ் சகோதரர்களையும்
கட்சிகளையும் போன்று நாங்கள் என்ன அர்ப்பணிப்பும்
ஆர்ப்பாட்டங்களும் தியாகங்களும் செய்தோம்?
இந்தக் கட்சி
புனித குர்ஆன்,
ஹதீஸ் அடிப்படைக்கு
அமைவாக உருவாக்கப்பட்டதென்றால்
அதன்படி நாங்கள்
நடக்கின்றோமா? அல்லது தலைமைத்துவம் வழி நடத்துகின்றதா?
கட்சி ஆரம்பிக்கப்பட்ட
நோக்கத்தைக் கூட மறந்து விட்டது தலைமை
என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்
சகோதர்களையும் தமிழ்க் கட்சிகளையும் போன்று நாங்கள்
என்ன அர்ப்பணிப்பும்
ஆர்ப்பாட்டங்களும் தியாகங்களும் செய்தோம்?
என்ற கேள்வியை
அவர் கேட்டுள்ளார்.
தமிழ் மக்களும்
தமிழ்க் கட்சிகளும்
செய்த ஆர்ப்பாட்டங்களாலும்
தியாகங்களாலும் அந்தச் சமூகம் பெற்ற அறுவடையைப்
புரிந்து கொண்டுள்ள
எவரும் இவ்வாறு
கூறியிருக்கமாட்டார்கள்.
அவர்களின்
ஆர்ப்பாட்டங்களாலும் தியாகங்களாலும் தமிழ்ச்
சமூகம் இதுவரை
எதனைச் சரியாகப்
பெற்றுக் கொண்டுள்ளது?
எதனைச் சாதித்த்து
என்பனவற்றை சம்பந்தப்பட்டோர் முதலில் புரிந்து கொள்ள
வேண்டும். ஆகக்
குறைந்தது அந்த
மக்களின் வாழ்வாதாரப்
பிரச்சினைக்கேனும் தீர்வு காணப்பட்டுள்ளதா?
சுமார் 40,000 ஆயிரம் மக்களைக் காவு கொடுத்த
நிலையிலும் இன்னும் அந்த மக்களின் அடிப்படைப்
பிரச்சினைகளுக்குக் கூட தீர்வில்லை.
அந்த மக்களின்
குறைந்தபட்ச அபிலாஷையான வடமாகாண சபையின் நிர்வாகச்
செயற்பாடு கூட
இன்று முடக்கப்பட்ட
நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே,
தமிழ் மக்களின்,
தமிழ்க் கட்சிகளின்
கடந்த காலப்
போராட்டத்தின் விளைவுகள், அதன் அறுவடைகளை முன்னிறுத்தி
பார்த்தே முஸ்லிம்
அரசியல் தலைமைகள்
தங்களது வழியைத்
தெரிவு செய்ய
வேண்டும் என்பதனையும்
இங்கு கூறவேண்டியுள்ளது.
தமிழ்
மக்களின், கட்சிகளின்
கடந்த காலப்
போராட்டங்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட பரிசு முஸ்லிம்
தலைமைகளுக்கான ஒரு கற்றுக் கொண்ட பாடமாக
மட்டுமே இருக்க
அமைய வேண்டுமே
தவிர பின்பற்றலாக
இருக்கவே கூடாது
என்பதனை சம்பந்தப்பட்ட
அனைத்துத் தரப்பும்
புரிந்து கொள்ள
வேண்டும்.
இந்த
நாட்டின் முதலாவது
சிறுபான்மைச் சமூகமாக உள்ள தமிழர்களுக்கே இந்த
நிலை என்றால்
இரண்டாவது சிறுபான்மைச்
சமூகமான முஸ்லிம்களும்
முஸ்லிம் அரசியல்
கட்சிகளும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க்
கட்சிகளின் கடந்த கால வழிமுறைகளில் சென்றால்
நிலைமை என்னவாகும்?
காத்தான்குடியில் அல்லது கல்முனையில் இன்னொரு முள்ளிவாய்க்கால்
உருவாகும் நிலைதான்
ஏற்படும். மாளிகாவத்தையை
காஸாவாக மாற்றினால்
நாம் இஸ்ரவேலாக
மாறுவோம் என
பொதுபல சேனா
சூளுரைத்துள்ளதனை பலரும் புரிந்து கொள்ளாமை வேதனைமிக்கதே.
எனவே,
இந்த நாட்டில்
எங்கொரு மூலையில்
முஸ்லிம்களுக்கு அடி விழுந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ்
அரசிலிருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை
விடுப்பதே இன்று
பலருக்கும் வாடிக்கையாகி விட்டது. முஸ்லிம் காங்கிரஸ்தான்
கையாலாகாத கட்சி
என்றால் ஏனைய
கட்சிகளுக்கும் அதே நிலைமைதான். ஆனால், அதனைப்
பற்றி பேசவும்
அவர்களை அரசிலிருந்து
விலகுமாறு கூறுவதற்கும்
இன்று ஆட்கள்
பற்றாக்குறையாகவே உள்ளனர்.
எனவே,
இந்த விடயத்தை
பொத்துவில் மஜீத் மட்டுமல்ல.. முஸ்லிம் காங்கிரஸை
அரசிலிருந்து விலகு.. விலகு என்று கனவில்
கூட எழுந்து
கதறுவோரும் பகலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைச்சர்கள்
ரிஷாத், அதாவுல்லாஹ்
ஆகியோரின் கட்சிகள்
கூட அண்மைய
கலவரங்கள் தொடர்பில்
தங்களால் முடிந்தவற்றை
முன்னெடுக்க முயற்சித்த போதும் அவற்றினாலும் முடியாமல்
போய் விட்டது.
அதற்காக அந்தக்
கட்சிகளைச் சேர்ந்த எவரும் விலகிப் போகவில்லை
என்பதனையும் சம்பந்தப்படவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
மேலும்,
இன்றைய சூழ்நிலையில்
முஸ்லிம் கட்சிகளின்
ஐக்கியம் எந்தளவுக்கு
முக்கியமானதோ அந்தளவுக்கு தாங்கள், தாங்கள் சார்ந்த
முஸ்லிம் கட்சிகள்
மீதான விசுவாசம்,
நம்பிக்கையும் அனைவருக்கும் அவசியமாகிறது.
ஒரு கட்சியின்
சக்தி என்பது
அதனுடன் உள்ளவர்களையும்
உள்ளடக்கியதாகும். ஒரு கட்சிக்கான
மக்கள் செல்வாக்கின்
அடுத்த பலம்
கட்சி முக்கியஸ்தர்களே.
இதனை அனைவரும்
புரிந்து கொள்வது
அவசியம்.
கையில்
இருக்கும் கத்தி
தங்கத்திலானது என்பதற்காக வயிற்றைக் குத்திக் கொள்ளக்
கூடாது என்பது
உண்மைதான். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர்
தெளிவு பெறுவது
அவசியம்.
நன்றி:
வீரகேசரி வாரவெளியீடு
(20-07-2014)
0 comments:
Post a Comment