ஈரான் மீதான 8 பில்லியன்
டாலர் நிதி முடக்கத்தை விடுவிப்பதாக
அமெரிக்கா
அறிவிப்பு
ஈரான்
அணு ஆயுதத்திட்டப்
பிரச்சினையில் உடன்பாடு செய்து கொள்வதற்கு நேற்று
வரை உலக
வல்லரசு நாடுகள்
அவகாசம் வழங்கி
இருந்தன. ஆனால்
ஆஸ்திரியா தலைநகர்
வியன்னாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து
அந்த அவகாசத்தை
எதிர்வரும் நவம்பர் மாதம் வரை
நீடிக்க அந்த
நாடுகள் ஒப்புக்கொண்டன.
இது
தொடர்பாக ஐரோப்பிய
யூனியன் உயர்
பிரதிநிதி கேதரின்
ஆஷ்டனும், ஈரான்
வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப்பும்
நேற்று கூட்டாக
ஒரு அறிக்கை
வெளியிட்டிருக்கின்றனர்.
இதையடுத்து,
ஈரான் மீதான
8 பில்லியன் டாலர் நிதி முடக்கத்தை விடுவிப்பதாக
அமெரிக்கா அறிவித்துள்ளது.
அதற்கு பதிலாக
ஈரான் தன்வசமிருக்கும்
செறிவூட்டிய யுரேனியத்தில் 20 சதவீதத்தை
எரிபொருளாக மாற்றி விட வேண்டும்.
மீண்டும்
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம்
நடத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
0 comments:
Post a Comment