ஹமாஸ் இயக்கத்தினரை
குறிவைத்து
இஸ்ரேல் மீண்டும்
தாக்குதல்
பாலஸ்தீனர்கள்
மீது இஸ்ரேல்
மீண்டும் தாக்குதலை
தீவிரப்படுத்தியுள்ளது இதனால் மேற்கு
ஆசியாவில் பதற்றம்
ஏற்பட்டுள்ளது. காஸா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள
ஹமாஸ் போராளிகளுக்கும்,
இஸ்ரேல் இராணுவத்திற்கும்
இடையே கடந்த
8ஆம் திகதி
தொடங்கிய போர்,
ஐநா முயற்சியால்
5 மணி நேரம்
நிறுத்தப்பட்டது. இந்நிலையில் போர் நிறுத்தம் முடிவுக்கு
வந்ததும் தரைவழி
தாக்குதலை மீண்டும்
நடத்துமாறு இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டதால், ஹமாஸ்
போராளிகள் மீது
இஸ்ரேல் இராணுவம்
தாக்குதல் தீவிரப்படுத்தியுள்ளது.
பீரங்கி
தாக்குதலில் 23 அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக முதல்கட்ட
தகவல் கிடைத்துள்ளது.
தரைவழி தாக்குதல்
நடத்தும் இஸ்ரேலுக்கு ஹமாஸ் போராளிகள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர். தாக்குதலை தொடர்ந்தால் மோசமான விளைவுகளை
இஸ்ரேல் சந்திக்க
வேண்டியிருக்கும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதனிடையே ஹமாஸ்-இஸ்ரேல் இடையே
போர் நிறுத்தம்
கொண்டு வர
ஐநா முயற்சி
எடுத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 307 பாலஸ்தீனர்கள்
கொல்லப்பட்டதாகவும் 2260 பேர் காயமடைந்திருப்பதாகவும்
கூறப்படுகிறது. இருதரப்பு போர் காரணமாக வளைகுடா
மற்றும் மேற்கு
ஆசிய நாடுகளில்
உள்ள வெளிநாட்டு
தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment