விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஆய்வுகளை
மேற்கொள்ள
சர்வதேச குழுவுக்கு
கிளர்ச்சியாளர்கள் அனுமதி மறுப்பு
உக்ரைனின்
கிழக்குப் பகுதியில்
மலேசியன் ஏர்லைன்ஸ்
விமானம் சுட்டு
வீழ்த்தப்பட்ட சம்பவப் பகுதிக்கு சர்வதேச விசாரணை
மற்றும் மீட்புக்
குழு செல்வதற்கு
ரஷ்யா ஆதரவு
பெற்ற கிளர்ச்சியாளர்கள்
அனுமதி மறுத்துள்ளனர். தங்களது பாதுகாப்பைக்
கருத்தில் கொண்டு,
இவர்களை சம்பவப்
பகுதிக்குள் அனுமதிக்க முடியாது என்றும் உறுதியாகக்
கூறியுள்ளனர்.
விமான
விபத்து நடந்த
இடம் கிளர்ச்சியாளர்கள்
வசம் உள்ளது.
அதனை மீட்க
இராணுவம் கடும்
சண்டையிட்டு வருகிறது.
இந்த
நிலையில், விமானம்
விழுந்து நொறுங்கிய
இடத்தில் ஆய்வு
மேற்கொள்ள சர்வதேச
குழுக்கள் முடிவு
செய்துள்ளன. இதற்காக மலேசியாவில் இருந்து 62 பேர்
கொண்ட குழு
உக்ரைன் புறப்பட்டுள்ளது.
இந்த
விபத்தில் நெதர்லாந்தைச்
சேர்ந்த 192 பேர் பலியாகியிருப்பதால், அந்நாட்டில் இருந்து
15 தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழு உக்ரைனின்
கீவ் நகருக்கு
சென்றுள்ளது. இதில்லாமல், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும்
ஒத்துழைப்புக் குழுவும் உக்ரைன் சென்றுள்ளது.
ஆனால்,
இந்தக் குழுக்கள்
சம்பவப் பகுதிக்குச்
செல்ல கிளர்ச்சியாளர்கள்
தடை விதித்துள்ளனர்.
தங்களது பாதுகாப்பைக்
கருத்தில் கொண்டு,
இவர்களை சம்பவப்
பகுதிக்குள் அனுமதிக்க முடியாது என்று உறுதியாகக்
கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment