காபூல் விமான
நிலையம் மீது
போராளிகள்
பயங்கர தாக்குதல்
போராளிகள் அடுத்தடுத்து குண்டுகளை வீசி வருவதால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு.
ஆப்கானிஸ்தானில்
தலிபான் போராளிகள்
அடிக்கடி தாக்குதல்
நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம்
சந்தையில் நடந்த
கார் குண்டு
தாக்குதலில் 43 பேர் இறந்தனர். தலிபான்களுக்கு காபூலில்
உள்ள நேட்டோ
படை வீரர்கள்
மட்டுமே பெரும்
தடையாக உள்ளனர்.
இதனால் நேட்டோ
படை வீரர்கள்
வந்து செல்லும்
காபூல் சர்வதேச
விமான நிலையத்தை
குறி வைத்து
தாக்குதல் நடத்தி
வருகின்றனர்.
இந்நிலையில்
இன்று அதிகாலை
காபூல் விமான
நிலையம் மீது
தலிபான் போராளிகள்
மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். காபூல் விமான
நிலையத்தில் வடக்கு பகுதியில் உள்ள கட்டிடத்துக்குள்
இருந்து விமான
நிலைய ஓடுபாதை
மீது குண்டுகள்
வீசப்பட்டன. உடனடியாக அந்த பகுதிக்கு ஆப்கானிஸ்தான்
இராணுவத்தின் அதிரடிப்படை விரைந்தது. நேட்டோ படை
வீரர்களும் காபூல் விமான நிலையத்தை சுற்றி
வளைத்தனர். அவர்களுக்கும் தலிபான் போராளிகளுக்கும் இடையே
பல மணி
நேரம் தொடர்ந்து
கடும் துப்பாக்கி
சண்டை நடந்தது.
போராளிகள் அடுத்தடுத்து
குண்டுகளை வீசி
வருவதால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதையடுத்து காபூல் நோக்கி வந்த விமானங்கள் அனைத்தும், ஆப்கானிஸ்தானில் உள்ள மற்ற நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் சித்திக் கூறுகையில், 'நேட்டோவின் அதிரடிப்படை போராளிகள் உள்ள கட்டிடத்தை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment