மஹிந்தவின் மே தின கூட்டத்தில் கலக தடுப்பு பொலிஸார்
நீர் தாரை பிரயோகிக்கும் வாகனங்களும் நிறுத்தி வைப்பு

கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட மே தின கூட்டத்திற்கு கலகத் தடுப்பு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  , நீர் தாரை பிரயோகிக்கும் வாகனங்களும் அங்கு  நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த மே தின கூட்டத்தை நடத்துவதற்கு கூட்டு எதிரணியினர் நாரஹேன்பிட்டி - சாலிகா மைதானத்திற்கு அனுமதி கோரியிருந்த நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் பிரகாரம், குறித்த கூட்டம் தற்போது கிருலப்பனையில் நடைபெற்று வருகின்றது.
அத்துடன், நாரஹேன்பிட்டி மற்றும் சாலிகா மைதான வளாகப் பகுதிகளில்
அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top