நீர் சேவை தொழிற்றுறைக்கான சட்டத்திட்டங்களை
தயாரிப்பதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு
ஆலோசனை வழங்குவது தொடர்பில்
அமைச்சரவை அங்கீகாரம்
நீர்
நுகர்வோர்களின் உரிமைகளினை பாதுகாக்கும் நோக்கிலும், நீர்
சேவை கைத்தொழில்களில்
முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் பலனுள்ள ஒழுங்குமுறையொன்று
அவசியம் என
இனங்காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
தேசிய நீர்
வழங்கல் மற்றும்
வடிகாலமைப்பு சபையினை 'செயற்பாட்டாளர்' ஆகவும், பொது மக்கள் பயன்பாட்டு
ஆணைக்குழுவினை 'வரையறுப்பவர்' எனும் ரீதியில் பலப்படுத்தி,
இலங்கையில் நீர் சேவை தொழிற்றுறையினை முறைப்படுத்தவும்,
அதற்காக கொள்கை
வழிகாட்டல்களை தயாரிப்பதனை நோக்காகக் கொண்டு
நீர்
சேவை கைத்தொழில்
சட்டமூலத்தை தயாரிப்பது தொடர்பில் சட்ட வரைஞர்
திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நகர
திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment