கல்முனை உண்ணாவிரத இடத்திற்கு சென்ற
பிரதி மேயர் காத்த முத்து கணேஷ்
அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சர்வ மதத் தலைவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு சென்ற கல்முனை பிரதி மேயர் காத்த முத்து கணேஷ் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
குறித்த போராட்டம் இன்றுடன் ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அங்கு சென்றிருந்த  கல்முனை பிரதி மேயர் காத்த முத்து கணேஷ் போராட்டத்தினை குழப்ப முற்பட்டதாகக் கூறி அங்கிருந்த மக்களால் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.. இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top