எம்.எச்.17
மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தி
'எனது மகளை கொலை செய்ததற்கு நன்றி'
உயிரிழந்த மாணவியின் தந்தை ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம்
எம்.எச்.17 மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இறந்த மாணவி ஒருவரின் தந்தை 'எனது மகளை கொலை செய்ததற்கு நன்றி' என்று ரஸ்ய ஜனாதிபதி வினாடிமீர் புதினுக்கு வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதித் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் அந்நாட்டு ஆங்கில நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கடந்த 17 ஆம் திகதி கோலாலம்பூர் நோக்கி பறந்து கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கிழக்கு உக்ரைன் பகுதியில் பறந்து வந்த போது ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர் அல்லவா?
இந்த சம்பவத்துக்கு ரஸ்யாவும் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் நெதர்லாந்தை சேர்ந்த 17 வயது மாணவி எல்ஸ்மிய்க் டி போர்ஸ்ட்டும் பலியானார். மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் உலக நாடுகளே அதிர்ச்சியில் உள்ளது. மேலும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் தந்தை ஹான்ஸ் டி போர்ஸ்ட், ரஸ்யா ஜனாதிபதி புதினுக்கு வெளிப்படையான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இந்த கடிதம் அந்நாட்டு ஆங்கில நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'எனது மகளை கொலை செய்தவர்களுக்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார். என்னுடைய அன்பு நிறைந்த மற்றும் ஒரே மகளான எல்ஸ்மியக் டி போஸ்ட்டை கொலை செய்த, ரஸ்யா ஜனாதிபதி விளாடிமீர் புதின், கிளர்ச்சி படையினர் மற்றும் உக்ரைன் அரசுக்கு மிகவும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். எதிர்பாராத விதமாக எனது மகள் பயணம் செய்த விமானம் போர் ஏற்பட்டுள்ள நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
"எனது மகள் எச்ஸ்மியக் அடுத்த ஆண்டு பள்ளி படிப்பை தனது தோழிகள் ஜூலிலா மற்றும் மாரினெவுடன் (இவர்கள் விமானத்தில் பயணம் செய்யவில்லை) முடிக்கவுள்ளார். அவர் மிகவும் சிறப்பாக தனது பணியினை செய்தார். டெல்ப் பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினியரிங் படிக்க விரும்பினார். அதனை செய்வதில் அவள் மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள். ஆனால் அவள் தற்போது உயிருடன் இல்லை. அவள் போர் நடந்துவரும் நாட்டில் வானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார். என்னுடைய மகள் மற்றும் அவரது கனவை சுட்டுத் தள்ளியதில் இதனை செய்த நீங்கள் மிகவும் கர்வமாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். மீண்டும் நன்றி.
0 comments:
Post a Comment