அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய
காங்கிரஸ் கட்சியில் இணையமாட்டேன்
-எஸ்.எஸ்.பி அப்துல் மஜீத்
. - ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அமைச்சர்
அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வது
தொடர்பில் எவ்வித
தீர்மானத்தையோ அல்லது கலந்துரையாடலையோ தான் மேற்கொள்ளவில்லை
என பொத்துவில்
எஸ்.எஸ்.பி. மஜீத்
தெரிவித்தார்.
எனது
முகநூலில் நேற்று
என்னால் பதிவிடப்பட்ட
இது தொடர்பான
தகவல் குறித்தே
அவர் இவ்வாறு
கூறினார். நான்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸிலிருந்து வெளியேறியது உண்மை.
ஆனால், எனது
எதிர்கால அரசியல்
மற்றும் எந்தக்
கட்சியில் சேர்வது
என்பது தொடர்பில்
இதுவரை தீர்மானிக்கவில்லை.
அவ்வாறு எதிர்காலத்தில்
அரசியலில் ஈடுபட்டாலும்
அமைச்சர் அதாவுல்லாஹ்வின்
தேசிய காங்கிரஸ்
கட்சியில் இணையப்
போவதில்லை.
கிழக்கு
மாகாணத்தில் (அம்பாறை மாவட்டத்தை பிரதான தளமாகக்
கொண்டு) புதிதாக
உருவாகவுள்ள ஐக்கிய முஸ்லிம் கட்சியில் (United Muslim party) சேர்ந்து கொள்ளுமாறு
உதுமான்கண்டு நபீர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், அந்த
அழைப்பினை நான்
ஏற்றுக் கொள்ளவில்லை.
மிக
விரைவில் எனது
அரசியல் நிலைப்பாடு
தொடர்பில் நான்
பகிரங்கமாக அறிவிக்கவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment