காசாவில் வீட்டை சுற்றி ராக்கெட் தாக்குதல்

பாலஸ்தீன மாணவரின் நெஞ்சை தொடும் டுவிட்டர் செய்தி

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த ஒரு வாரமாக வான் வழி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று வருகிறதுஇதில், காசா பகுதியில் இராணுவ அதிகாரிகளை காட்டிலும் ஒன்றுமறியாத பொதுமக்கள் அதிகமாக கொல்லப்பட்டு உள்ளனர்.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, போரில் இறந்தவர்களில் 77 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஆவர்.
இந்நிலையில், பாலஸ்தீனத்தை சேர்ந்த 22 வயது மாணவரான முகம்மது சுலைமான் போர் குறித்து டுவிட்டரில் தொடர்ந்து உருக்கமான தகவல்களை வெளியிட்டு வருகிறார்லண்டன் பொருளாதார கல்வி கூடத்தில் பட்ட படிப்பை படித்து வரும் முகம்மது, காசாவில் தினமும் நடக்கும் பல முறை தாக்குதல்கள் குறித்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில் பெரும்பாலானவை போரின் கொடுமை அல்லது அவரது வீட்டிற்கு வெளியே உள்ள சூழல் மற்றும் மோசமாகி வரும் நிலை குறித்து அமைந்துள்ளன.
அவரது டுவிட்டர் செய்தியில், சில இஸ்ரேல் நாட்டவர்கள் நான் மரணமடைய வேண்டும் என விரும்புகிறார்கள். என்னிடம் தங்களது விருப்பத்தைக் கேட்டால். அவர்களின் விருப்பம் போல் நான் இறக்கலாம்ஆனால், எனது விருப்பம் நீங்கள் உட்பட ஒருவரும் மரணம் அடைய கூடாதுநாம் இருவரும் வாழ வேண்டும் என்பது எனது விருப்பம்இந்த நாட்டில் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த போர் என்ன முன்னேற்றத்தை கொண்டு வந்து விட போகிறது என்பதை அறியாத ஒரு சிலரில் முகம்மதுவும் ஒருவர்அவரது டுவிட்டர் செய்தி, போரின் மத்தியில் இருக்கும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top