வித்தியா பிரபா 2014 - அகில இலங்கை ஆய்வுகூடப் போட்டியில்
கல்முனை உவெஸ்லி
உயர்தர பாடசாலை வெற்றியாளராகத்
தெரிவு
ஒத்தியல்பு
மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகார சபை ( SLAB ) தேசிய
ரீதியில் க.பொ.த. உயர்தர விஞ்ஞான
ஆய்வுகூடங்களிடையே நடாத்தப்பட்ட போட்டியில் கல்முனை உவெஸ்லி
உயர்தர பாடசாலை
கல்முனை வலயத்தில்
வலய வெற்றியாளராக
தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அகில
இலங்கையிலும் உள்ள பாடசாலைகளிலிருந்து 45
ஆய்வுகூடங்களே வெற்றி பெற்றிருந்தன.
அண்மையில்
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் வெற்றி
பெற்றவர்களுக்கான வைபவம் ஒன்று இடம்பெற்றது.
இவ்வைபவத்தில்
வெற்றிக் கேடயம்,
சான்றிதழ் மற்றும்
பணப்பரிசில் என்பன பிரதிக் கல்வி அமைச்சரினால்
பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வெற்றிக்காக
உழைத்த மாணவர்கள்,
ஆசிரியர்கள், ஆய்வுகூட உதவியாளர் ஆகியோரை பாடசாலை
அதிபர் வி.பிரபாகரன்
பாடசாலையில் நடைபெற்ற காலை
ஆராதனையில் பாராட்டியதோடு வெற்றிச் சின்னங்களையும் கையளித்தார்.
நன்றி:
கலசம்
0 comments:
Post a Comment