28 ஆண்டுக்கு பிறகு கால்இறுதியை எட்டியது பெல்ஜியம்


உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவை வெளியேற்றி 28 ஆண்டுகளுக்கு பிறகு கால்இறுதியை எட்டிப்பிடித்து பெல்ஜியம் சாதனை படைத்துள்ளது.
பிரேசிலில் நடந்து வரும் 20–வது உலக கோப்பை கால்பந்து திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இதில் சால்வடோர் மைதானத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த கடைசி 2–வது சுற்று ஆட்டத்தில் பெல்ஜியமும், அமெரிக்காவும் சந்தித்தன.
லீக் சுற்றில்ஹாட்ரிக்வெற்றியை ருசித்த பெல்ஜியம் அணி 6 மாற்றங்களுடன் களம் புகுந்தது. முதல் வினாடியிலேயே பெல்ஜியம் வீரர் டிவோக் ஒர்ஜி அடித்த சூப்பர் ஷாட்டை அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹாவர்ட் தடுத்தார்.
இப்படி ஆரம்பத்தில் இருந்தே பெல்ஜியம் தாக்குதல் பாணியை தொடுத்தது. பதிலுக்கு அமெரிக்காவும் அதிரடி ஆட்டத்தை மேற்கொண்ட போதிலும், பெல்ஜியத்தின் கையே ஓங்கியது. சுனாமி போல் சீறிபாய்ந்த பெல்ஜியம் வீரர்கள் அலைஅலையாக ஊடுருவி அமெரிக்க கோல் கம்பத்தை முற்றுகையிட்டனர்.
ஆனால் அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹாவர்ட் அதிக விழிப்புடன் செயல்பட்டதால் பெல்ஜியத்தின் பாய்ச்சா பலிக்கவில்லை. ஒன்றல்ல...இரண்டல்ல....இலக்கை நோக்கி பெல்ஜியம் வலுவாக உதைத்த ஷாட்டுகளில் 16 வாய்ப்புகளை கனகச்சிதமாக தகர்த்து தங்கள் அணியின் ஆபத்பாந்தவனாக ஜொலித்தார். இதே போல் அமெரிக்காவின் ஒரு சில முயற்சிகளை பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டியோஸ் தூள்தூளாக்கினார்.
இதனால் வழக்கமான ஆட்டநேரமான 90 நிமிடங்களில் கோல் ஏதும் விழவில்லை. இதையடுத்து கூடுதல் நேரமாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. நீண்ட நேரம் நீடித்தநீயாநானாயுத்தத்திற்கு ஒரு வழியாக கூடுதல் நேரத்தில் முடிவு கிடைத்தது. 93–வது நிமிடத்தில் அமெரிக்க பின்கள வீரர்கள் 3 பேர் மற்றும் கோல் கீப்பர் ஹாவர்ட்டை ஏமாற்றி பெல்ஜியம் வீரர் கெவின் டி புருனே சாதுர்யமாக கோல் அடித்தார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து அமெரிக்கா மீள்வதற்குள் 105–வது நிமிடத்தில் பெல்ஜியம் இன்னொரு கோலை போட்டது. புருனே தட்டிக் கொடுத்த பந்தை சக மாற்று ஆட்டக்காரர் ரோமிலு லுகாகு கோலாக்கினார்.
இதன் பின்னர் அமெரிக்க அணி உச்சகட்ட ஆக்ரோஷத்தை காட்டியது. 107–வது நிமிடத்தில் மைக்கேல் பிராட்லியின் உதையின் மூலம் அந்தரத்தில் பறந்து வந்த பந்தை, அதன் போக்கில் அப்படியே வலது காலால் கோல் வலைக்குள் திருப்பி மெய் சிலிர்க்க வைத்தார், அமெரிக்க மாற்று ஆட்டக்காரர் ஜூலியன் கிரீன். 19 வயது நிரம்பிய இவர் தான் இந்த உலக கோப்பையில் கோல் அடித்த இளம் நாயகன் ஆவார்.
இதைத் தொடர்ந்து மேலும் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை பெனால்டி ஷூட்அவுட்டுக்குள் இழுத்து விட வேண்டும் அமெரிக்கா கடுமையாக மல்லுகட்டியது. 114–வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் டெம்சி விரட்டிய ஷாட்டை, எதிரணி கீப்பர் கோர்ட்டியோஸ் முறியடித்தார். முடிவில் பெல்ஜியம் அணி 2–1 என்ற கோல் திரில் வெற்றியை சுவைத்து கால்இறுதிக்கு முன்னேறியது.
12–வது முறையாக உலக கோப்பையில் பங்கேற்றுள்ள பெல்ஜியம் அணி 2–வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதற்கு முன்பு 1986–ம் ஆண்டு அரைஇறுதி வரை வந்து 4–வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியம் அரைஇறுதியில் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
இந்தட்டத்தை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாஅதிகாரிகளுடன் அமர்ந்து ஆட்டத்தை உற்சாக குரல் எழுப்பி ரசித்துக் கொண்டிருந்தார்அமெரிக்காவின் தோல்வி அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.


தோற்ற போதிலும் அமெரிக்க கோல் கீப்பர் 35 வயதான டிம் ஹாவர்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 16 முறை அணியை கோல் வாய்ப்பில் இருந்து காப்பாற்றிய அவர்உலக கோப்பையில் 1966–ம் ஆண்டுக்கு பிறகு அதிக முறை கோல் வாய்ப்பை முறியடித்த கோல் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top