மத்திய சென்னை தமிழ்மாநில
முஸ்லீம் லீக் தலைவர் வெட்டிக்கொலை

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் அக்பர் (வயது 32). தமிழ்மாநில முஸ்லிம்லீக் மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார்ரமழான் நோன்பு காலம் என்பதால் அக்பர் நோன்பு இருந்துவந்தார்இன்று  காலை 4 மணியளவில் நோன்பு இருக்கும் ஸஹர் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக ஐஸ் அவுஸ் டாக்டர் பெசன்ட் தெருவில் உள்ள பகுதிக்கு சென்றார்அப்போது அங்கு மறைந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அக்பரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதுபலத்த வெட்டு காயத்துடன் கிடந்த அவரை அரசு பொது மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
அக்பர் கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் அவரது குடும்பத்தினர்கள்கட்சி நிர்வாகிகள் ஐஸ் அவுஸ் பொலிஸ் நிலையத்தில் குவிந்தனர்கொலையாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்இந்த படுகொலை குறித்து மயிலாப்பூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.அக்பரைக்கொலைசெய்த  கும்பல் திட்டமிட்டு தங்கள் கொலை வெறி தாக்குதலை நிறைவேற்றியுள்ளதுஅரசியல் முன் விரோதத்தில்  அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top