இலங்கையில்
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு
எதிரான தாக்குதல் அதிகரிப்பு
குற்றம் இழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்
- ஐ.நா சபையின் மனித உரிமைகள்
ஆணையம் வலியுறுத்து
முஸ்லிம்கள்
மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும்
வன்முறைகளை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த
வேண்டும் என்று
ஐ.நா
சபை வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா சபையின்
மனித உரிமைகள்
ஆணையம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், இலங்கையில் சிறுபான்மையினருக்கு
எதிரான தாக்குதல்
அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு
எதிராக 350 தாக்குதல்களும், கிறிஸ்தவர்களுக்கு
எதிராக 150 தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டு
இருப்பதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில்
முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கவலையளிப்பதாக
ஐ.நா
மனித உரிமை
ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள சிறுபான்மையினர் மீது விரோத
உணர்ச்சியை வளர்க்கும் விதத்தில் பெளத்த அமைப்புகள்
செயல்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
குற்றம் இழைத்தவர்களை
சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும்
ஐ.நா
மனித உரிமைகள்
ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment