ஷஹிதானவர்களின் எண்ணிக்கை
607 ஐ தாண்டியது
காஸா மீது
தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த
வேண்டும்
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வேண்டுகோள்
பாலஸ்தீனத்தில்
காஸா நகர்
மீது இஸ்ரேல்
இராணுவம் நடத்தி
வரும் தொடர்
தாக்குலில் பலி எண்ணிக்கை 607 ஐ தாண்டியது.
இரு தரப்பிலும்
போரை நிறுத்த
முன்வர வேண்டும்
என அமெரிக்க
ஜனாதிபதி ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் உள்ள காஸா நகரில் இருந்து
2 வாரங்களுக்கு முன்பு ஹமாஸ் போராளிகள் நடத்திய
ராக்கெட் தாக்குதலில்
இஸ்ரேல் வாலிபர்கள்
2 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து கடந்த 8 ஆம் திகதி முதல்
காஸா மீது
இஸ்ரேல் இராணுவம்
வான்வழி மற்றும்
தரைவழியாக தீவிர
இராணுவ தாக்குதலை
நடத்தி வருகிறது.
இதில், காஸா
நகரில் உள்ள
போராளிகளுடன் அப்பாவி பாலஸ்தீன மக்களும் கொல்லப்படுகின்றனர்.
நகரமே பற்றி
எரிகிறது. குழந்தைகள்,
பெண்கள் உட்பட607க்கும்
மேற்பட்ட பொது மக்கள் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
சுமார் 1 லட்சத்திற்கும்
அதிகமான பாலஸ்தீன
மக்கள் காஸாவை
விட்டு வெளியேறி
பாதுகாப்பான இடங்களை நோக்கி தஞ்சம் அடைந்து
வருகின்றனர். ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் இஸ்ரேல்
இராணுவ வீரர்கள்
28 பேர் பலியானதாக
கூறப்படுகிறது.
இதேவேளை,
தாக்குதலை நிறுத்தப்
போவதில்லை என
இஸ்ரேல் பிரதமர்
நெதன்யாகு அறிவித்தார்.
போர் நிறுத்த
அறிவிப்பை ஏற்று
கொள்ள ஹமாஸ்
போராளிகளும் மறுத்துள்ளனர். இந்நிலையில்,
அப்பாவி பாலஸ்தீன
மக்கள் பலியாகி
வருவது சர்வதேச
நாடுகளை கவலையடைய
செய்துள்ளது. அந்த பிராந்தியத்தில் உடனடியாக போர்
நிறுத்தம் மேற்கொள்ள
வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம்
தொடர்பாக பேச்சு
வார்த்தை நடத்த
அமெரிக்க வெளியுறவுத்துறை
அமைச்சர் ஜான்
கெர்ரி நேற்று
எகிப்து தலைநகர்
கெய்ரோ விரைந்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து
ஐ.நா.
பொதுச் செயலாளர்
பான் கீ
மூனும் அங்கு
சென்றுள்ளார். ஏற்கனவே பாலஸ்தீன அதிபர் முகமது
அப்பாஸ் இரு
தினங்களுக்கு முன்பே எகிப்து மற்றும் துருக்கி
ஆகிய நாடுகளுடன்
பேச்சு நடத்த
வந்துள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியிருப்பதாவது: ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து 1500 ராக்கெட்
ஏவுகணைகளை ஏவியுள்ளதால்,
இஸ்ரேலும் எதிர்தாக்குதல்
நடத்த வேண்டியதாகி
விட்டது. தற்போது,
இஸ்ரேல் தாக்குதலில்
போராளிகள் நிலை
குலைந்து போயுள்ளனர்.
அதே நேரத்தில்
இரு தரப்பு
தாக்குதல்களாலும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட
வேண்டும். எனவே,
போர் நிறுத்தத்தை
உடனடியாக கொண்டு
வர
வேண்டும். இதை சர்வதேச நாடுகள் வலியுறுத்த
வேண்டும். இவ்வாறு
ஒபாமா கூறியுள்ளார்.
எகிப்து சென்றுள்ள
ஜான் கெர்ரி,
‘இஸ்ரேல் தாக்குதலில்
பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு 47 மில்லியன்
டாலர் நிவாரண
உதவி வழங்கப்படும்’
என்று தெரிவித்தார்.
ஐ.நா.
செயலாளர் பான்
கீ மூன்
கூறுகையில், ‘எவ்வகையிலும் வன்முறையை ஏற்றுக் கொள்ள
முடியாது. இரு
தரப்பிலும் தாக்குதல் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட
வேண்டும்’ என்றார்.
0 comments:
Post a Comment