******அப்துள் கரீம்******


1949 முதல் இன்றுவரை
பல்லாயிரம் பட்டதாரிகளை
பதம்பார்த்து புடம்போட்டு
பாரிநிலே படரவிட்டேன்.
பார்கும் இடமேல்லாம்
பட்டதாரி நான் படித்ததெல்லாம்
ஸாகிறாவில்தான்
என்று மார்தட்டி கொள்கிறார்கள்.
என் பிள்ளைகள்.
ஆனால் நான் இங்கு
சாக்கடையின் பிறப்பிடம்போல்
சாலையெல்லாம்
சாக்கடையாயுள்ளேன்.
 என் பெயரை சொல்லியும்
அதோட ஆண்டு பெயரையும் சேர்த்து
ஆளாளுக்கு T சேட் அடித்தும்
ஆங்காங்கே புகழாரம் சூடுகின்றனர்.
அநாதையாக நான் அழகிழந்து வருவதை
யாரரீவாரோ...
இன்று பலர் 21.07.2014
இப்தார் என்று
என்பெயரால்
ஒன்றுகூடுகின்றனர்
என்னைப்பற்றி சிந்திப்பார்களோ
இல்லை தின்னை நாயாய்
என்னை தள்ளிவைப்பார்களோ..
உங்களை உலகறியவைத்த என்னை
ஓரக்கண் கொண்டாவது ஒருதடவை
பார்த்துவிட்டு செல்லுங்கள்
இப்படிக்கு கல்முனை ஸாகிறா கல்லூரி.

கல்முனை  மஹ்மூத் மகளீர் கல்லூரி கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பகல் நேரத்தில்

கல்முனை  மஹ்மூத் மகளீர் கல்லூரி கல்முனை ஸாஹிறாக் கல்லூரி இரவு நேரத்தில் 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top