மலாலாவுக்கு
அமெரிக்காவின் சுதந்திரப் பதக்கம்
பெண்கள்
கல்வி கற்க
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசியதால், தலிபான்
போராளிகளால் சுடப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா
யூசஃப்ஸாய்க்கு இந்தாண்டுக்கான சுதந்திரப் பதக்கம் வழங்கப்படும்
என்று அமெரிக்காவின்
தேசிய அரசியலமைப்பு
மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து,
மலாலா ( வயது
17 ) கூறுகையில், ""கௌரவமிக்க இந்தச் சுதந்திரப் பதக்கத்தை பெறுவது பெருமைக்குரிய விஷயமாகும். உலக அளவில் கல்விக்காக போராடிக் கொண்டிருக்கும்
குழந்தைகளின் சார்பில் இந்த பதக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தேசிய
அரசியலமைப்பு மையத்தில் எதிர்வரும் அக்டோபர் 21 ஆம்
திகதி நடைபெறும்
நிகழ்ச்சியில் மலாலாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த
1989ஆம் ஆண்டில்
அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பதக்கம்
முதன் முதலாக
போலந்து நாட்டின்
தொழிலாளர்கள் உரிமைக்காகப் பாடுபட்ட முக்கியத் தலைவரான
லேக் வலேஸாவுக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு, குத்துச் சண்டை வீரர் முகமது அலி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோருக்கும் இந்தப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.