கிழக்கு காஸா பகுதியிலிருந்து வெளியேறுங்கள்
பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதால் கிழக்கு காஸா பகுதியில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேலான பாலஸ்தீனர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இராணுவத்தினர் தாக்குதலில் 227 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். ஹமாஸ் ராக்கெட் வீச்சில் ஒரு இஸ்ரேலியர் பலியானார்.
இது குறித்து .எஃப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
காஸா நகரின் தென்கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் விமானம் மூலம் துண்டு பிரசுரங்களை வீடுகள் மற்றும் பிற இடங்களில் புதன்கிழமை வீசியது.
அதில் "போராளிகள் பதுங்கியுள்ளதாகக் கருதப்படும் ஜைதுன், சுஜையா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போராளிகளின் படைத் தளங்களை அழிப்பதற்காக வான் வழித்தாக்குதல் நடத்தப்பட உள்ளது. எனவே, அப்பகுதியில் வசிப்போர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுங்கள்' என்று அச்சிடப்பட்டிருந்தது.
இந்தத் தகவலை பதிவு செய்யப்பட்ட ஒலி பெருக்கி மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்தது.
காஸாவின் வடக்குப் பகுதியான பெய்த் லஹியா பகுதியில் வசிப்போரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரையில் அவர்கள் வீடு திரும்ப வேண்டாம் என்றும் இஸ்ரேல் துண்டு பிரசுரம் மூலம் எச்சரித்தது என்று அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக பெய்த் லஹியா பகுதி மக்களை வெளியேறும்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் விதித்த கெடு காரணமாக 17 ஆயிரம் பாலஸ்தீனர்கள் தங்கள் உடமைகளை விட்டுவிட்டு .நா. முகாமில் ஏற்கெனவே தஞ்சம் அடைந்துள்ளனர்.
தாக்குதல் தீவிரம்: இதனிடையே, எகிப்தின் போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் போராளிகள் ஏற்காததை அடுத்து புதன்கிழமை 9ஆவது நாளாக விமானத் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இதில், பலர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 208 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும், 1,450 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹமாஸ் போராளிகள் தாக்குதலில் இஸ்ரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும், சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, "போர் நிறுத்தத் திட்டத்தை நிராகரித்த போராளிகள் பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.
ஹமாஸுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்இந்நிலையில்அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில், "" எகிப்திய தலைவர்களால் மிக குறுகிய காலகட்டத்துக்குள் பரிந்துரைக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க அம்சமாகும்அதனை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது போர் நிறுத்தத்துக்கான முக்கிய நடவடிக்கையாக கருதுகிறோம்ஹமாஸ் மற்றும் பிற குழுக்களும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டும்'' என்றார்.














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top