ஓய்வு
பெற்ற எஸ்.எஸ்.பி. அப்துல் மஜீத்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்து இராஜினாமா
செய்யும் கடிதம்
05.07.2014
அன்புள்ள செயலாளர் ;அஸ்ஸலாமுஅலைக்கும்,
ஸ்ரீலங்கா மு.கா.கட்சியிலிருந்து
இராஜினாமாசெய்யும் கடிதம்
நான்
இந்தக்கடிதத்தை ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், அதிகமன வேதனையுடன்
கட்சியின் பிரதித்
தவிசாளர் பதவியிலிருந்தும்,
உறுப்பினரில் இருந்தும் இன்று முதல் (05.
07. 2014) இல் இராஜினாமா செய்கிறேன். காரணம், இக்கட்சியின்
அண்மைக்கால நடவடிக்கைகளும், ஏமாற்று நடைமுறையும், காலத்திற்குக்
காலம் நிறம்
மாறி காரணம் காட்டும் கட்சியாக மாற்றமடைந்து,
பதவிகளில் இருப்பவர்களின்
இருப்புக்களைப் பாதுகாக்கவும், தனது கொள்கையற்ற தலைமைத்துவத்தை
தக்கவைத்துக் கொள்வதற்கும் தேவையான பக்கவாத்தியங்களை இயக்கவுமேதவிர, முஸ்லிம்களின்
நலனுக்கும், பாதுகாப்பிற்கும் அல்ல,என்று அண்மைக்கால
விவகாரங்கள் நிரூபித்துள்ளன.
இப்பதவிகளைப்
பெற்றுத்தந்த சமூகத்தின் இருப்பை பாதுகாக்காமல், இத்தலைமை,
அரசாங்கத்தில் அமைச்சர் பதவியோடு மட்டும் இருந்தால்
அரசியலில் நிலைத்துவாழலாம்
என்று அண்மைக்கால
தீர்மானங்களும், நடவடிக்கைகளும் சாட்சிபகிர்கின்றன.
எனக்கு இக்கட்சியை விட்டுவிலகும்
எண்ணம் இதுவரை
இருந்ததில்லை. ஆனால் கடந்த பல மாதங்களாக
இந்நாட்டு முஸ்லிம்களுக்கும்,
குறிப்பாக தர்காநகர்,
பேருவளை, வெலிப்பன்னை,
பாணந்துறை போன்ற
பழமையான முஸ்லிம்
கிராமங்களில் வாழ்ந்துவரும் எங்கள்சகோதர,
சகோதரிகளுக்கும்சென்றமாதம் ஏற்பட்ட உயிர்,
உடமை இழப்புக்களையும்
அசம்பாவீதங்களையும் கண்டபின் நான்
இந்தத் தீர்மானதிற்கு
வந்தேன்.
முஸ்லிம்களுக்கெதிராக
நடக்கும் அநியாயங்களுக்கு
குரல் கொடுக்கவந்த
கட்சியென்றால், தமிழ் சகோதர்களையும், கட்சிகளையும் போன்று
நாங்கள் என்ன
அர்ப்பணிப்பும், ஆர்பாட்டங்களும், தியாகங்களும்
செய்தோம்?
இந்தக்கட்சி
புனிதக்குரான், ஹதீஸ் அடிப்படைக்கமைவாக உருபாக்கப்பட்டதென்றால் அதன்படி நாங்கள் நடக்கின்றோமா? அல்லது
தலைமைத்துவம் வழி நடத்துகின்றதா? கட்சி ஆரம்பிக்கப்பட்ட
நோக்கத்தைக்கூட மறந்து விட்டது
தலைமை.
இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய
பிரச்சினைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு அனுராதபுரம்சியாரம் உடைப்புடன் ஆரம்பித்து, ஹலால் உருதிச்
சீட்டுபத்திரத்திற்குள் சென்று, தம்புள்ள
பள்ளிவாசல் அகற்றும் நிகழ்வை பொதுபலசேனாவின் மதகுருமாரின்
முன்னிலையின் ஒருபயங்கரவாத சூழலை உருவாக்கி இன்று
நாடு முழுவதும்
சிறுபான்மை முஸ்லிம்களின் இருப்பை நிர்மூலம் ஆக்கும் நிகழ்வு நிரைவேற்றப்பட்டுள்ளது.
நாங்கள்
ஒரு முஸ்லிம்
அரசியல்கட்சி என்ற அடிப்படையில் அனுராதபுரத்திலோ, தம்புல்லையிலோ அல்லது கொழும்பு போலீஸ்
தலைமையகத்திலோ இந்த முறைகேடான, சட்டவிரோதமான நடத்தைக்குப்
பார்த்திரமாக தலைமை தாங்கியவர்கற்கு எதிராக முறையீடு
செய்தோமா? நீதியைதானும்
தேடுனோமா?
நாங்கள்
ஒரு முஸ்லிம்அரசியல்கட்சி
என்று கூறிக்கொண்டு,
எம் சமூகத்திற்கு
எதிராக அநியாயம்செய்யும்
குற்றவாளிகளை குற்றப்பதிவுக்கு கொண்டுவராமல்
நியாயம்கூறிக் கொண்டு பதவிப் போட்டிகளுடன் சுயநலன்களை
பாதுகாத்து கொள்வதற்கும் அரசாங்கத்துடன்
பயணம் செய்கிறோம்.
சமூகப்பிரச்சினைகள் எழும்போது உணர்ச்சிவசமாக
பேசிவிட்டு செயலில் சூனியமாகுவதால் சமூகம் சாதித்ததுதான்
என்ன?
இத்தனை
பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கின்ற
பொதுபலசேனாவிட்கு எதிராக நா ட்டில் நீதிக்குபொறுப்பாக
இருக்கும் அமைச்சர்
குறைந்த அளவு,
நீதியின் ஊடாக
எச்சரிகையாயினும் கொடுக்க முடிந்ததா?
அரசாங்கத்தில்
பங்காளியாக இருந்துகொண்டு சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு
எதையும் கண்டதாக
சமூகத்திற்கு தெரியவில்லை. அமைச்சர் பதவியை துறந்தால்
முஸ்லிம்களின் பிரச்சனைகள் முடிந்துவிடுமென்றுகூறும்
உத்தரவாதம்கேட்பது இக்கட்சியித் தலைமையின்
இயலாத்தன்மையை காட்டுகின்றது.
இதுவரை
இந்நாட்டு முஸ்லிம்களின்
இருப்பிற்கு இன்றைய அரசாங்கமும், மு. கா.கட்சி தலைமைத்துவமும்
நல்லவை செய்துள்ளார்கள்
என்றுதிருப்தி கண்டால் இக்கட்சியின் எதிர்காலத்தை முஸ்லிம்
சமூகமே தீர்மானிக்கட்டும்.
இக்கட்சியில்
இருந்த பலபிரமுகர்களும்
முக்கியஸ்தர்களும், ஸ்தாபகத்தலைவரின் மனைவியும் கூட முஸ்லிம் என்ற
சுவரொட்டியில் அறிமுகமாகி, வளர்ந்து, அனுபவித்துவிட்டு சுயனலதிட்காக கட்சியை துச்சமாக நினைத்து
அரசாங்க கட்சியோடு
சேர்ந்து உள்ளார்.
பொத்துவில்
எனது ஊர்.
இது முஸ்லிம்களைப்
பெருன்பான்மையாக கொண்டதும். இருந்தும், எமது சமூகம்
அங்கு அனுபவிக்கும்
துன்பங்களும், தொந்தரவுகளும், அட்டகாசங்களும்,
காணிச் சுவீகரிப்புகளும்
எண்ணிலடங்காது.இவ்வூர்மக்கள் எங்கே செல்வது? யாரிடம்சொல்வது?
என்று திக்குத்
தெரியாமல் தடுமாறுகின்றனர்.
கிரீஸ் மனிதன்
பிரச்சனை ஆரம்பித்த
காலம் தொட்டு
இதுவரை பல்வேறுதரப்பட்ட
பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு
முன் கிரீஸ் மனித விவகாரத்தில் இராணுவவெடியில்
மரணித்த மு.கா.கட்சி
பிரதேசசபை வேட்பாளரின்
மனைவிக்குத் தகமை இருந்தும் அமைச்சின் ஊடாக
குடும்ப வாழ்வாதாரத்தை
கொண்டு செல்ல
ஒரு தொழிலை
பெற்றுக் கொடுக்கலாமென்று
இன்றுவரை முயற்சித்தேன்.
முடியாமல் போய்விட்டது.
பொத்துவிலில் ஒருவருக்காயினும் தொழில் கொடுக்க முடியாத
கட்சியும், அமைச்சர் பதவியும், அமைப்பாளர்
பதவியும் எதற்கு? நாம் வெட்கித்துதலைகுனிய வேண்டிய சூழல்.
இக்கட்சித்தலைமைஉணருமா?
கையில்
இருக்கும் கத்தி
தங்கத்தால் செய்ததென்பதற்காக வயிற்றில்குத்திக்
கொள்ளமுடியுமா? ஒரு சிலர் அமைச்சுப் பதவிகளை
அனுபவித்தால், முஸ்லிம் சமூகம் சுதந்திரமாகவும், தன்னிரைவோடும் வாழ்கின்றார்கள்
என்ற அர்த்தமா?
அல்லது எண்ணமா?
இக்கட்சி தலைமைத்துவத்தின்
தொடர்ச்சியான சீர்கேடும், நம்பிக்கையீனமும்தான்,
இக்கட்சியில் தொடர்வதை முடிவுக்கு கொண்டு வரத்தூண்டியது.இந்தகட்சியில் நான்
சேர்ந்த நோக்கம்
தோல்வி கண்டுள்ளது.
எனவேதான் இத்தலைமைத்துவத்தின்
கீழ் என்னால்
இனியும் பயணிக்க
முடியாது.
மேல் கூறிய காரணங்களாலும்
அம்பாறை மாவட்டத்தின்
பொத்துவிலை சேர்ந்தவனும், சமூகத்தை நேசிப்பவன் என்ற
ரீதியிலும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து
நடத்தப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து மு. கா.கட்சி காட்டிய
எதிர்ப்பும்,
உணர்ச்சியும்
அற்பனமும் தமிழ்
கட்சிகளோடு ஒப்பிடும் போது பற்றாகுறையானது என்ற
ஆட்சேபனையை, ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி,
முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் என்ற
பார்வையின் அடிப்படையில் கட்சியிலிருந்து
இன்று இராஜினாமா
செய்கிறேன்.
இச்செய்தியைஎல்லாஉயர்பீடஉறுப்பினர்களுக்கும்தெரிவிக்கவும்.
நன்றி
எம்.அப்துல் மஜீத்

0 comments:
Post a Comment