நித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த

கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு


நித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் காவலில் நித்தியானந்தாவை எடுத்து மருத்துவ பரிசோதனை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நித்தியானந்தா மீது ஆர்த்திராவ் என்பவர் பாலியல் பாலத்கார வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கர்நாடகத்தில் ராம்நகர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பாலியல் பலாத்காரம் என்பதால்  நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் 2 ஆண்டுக்கு முன் தடைவிதித்து இருந்தது. தற்போது அந்த தடையை நீக்கி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயணன் உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top