மெக்ஸிகோவில் குளிர்பானம், நொறுக்குத் தீனி

விளம்பரங்களுக்கு தடை

மெக்ஸிகோ நாட்டில் குளிர்பானம், நொறுக்குத் தீனி விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோவில் உள்ளவர்களுக்கு உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அரசு, குளிர்பானங்கள், ஸ்னாக்ஸ் மற்றும் அதிக கலோரிகள் கொண்ட நொறுக்குத் தீனி உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது.

தொலைக்காட்சிகள் மற்றும் திரையரங்குகள், வார நாட்களில் (உள்ளூர் நேரம் ) பகல் 2.30 முதல் இரவு 9.30 மணிநேரம் வரையிலும், வார இறுதி நாட்களில், காலை 7 மணிமுதல் இரவு 07.30 மணிவரையிலும் குறிப்பிட்ட விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top