சசிதரூர் மனைவி சுனந்தா பிரேத பரிசோதனை விவகாரம்
நெருக்கடி வந்தது உண்மை என எய்ம்ஸ் டாக்டர் சுதிர் குப்தா உறுதி
இந்திய
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின்
மனைவி சுனந்தா
புஷ்கரின் பிரேத
பரிசோதனை அறிக்கை
அளித்த டாக்டர்
சுதிர் குப்தா
எந்த வித
நடவடிக்கைக்கும் அஞ்சவில்லை எனக் கூறியுள்ளார். சுனந்தா
புஷ்கரின் பிரேத
பரிசோதனை குறித்த
விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தமக்கு
நெருக்கடி குடுத்ததாக
தான் கூறியதில்
எந்த மாற்றமும்
இல்லை என
டாக்டர் சுதிர்
குப்தா தெரிவித்துள்ளார்.
தாம் அளித்த
பிரேத பரிசோதனை
அறிக்கை உறுதியானது
என்று அவர்
கூறியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தம்
மீது நடவடிக்கை
எடுத்தால் அதற்காக
தாம் அஞ்சப்
போவதில்லை என்றும்
சுதிர் குப்தா
தெரிவித்துள்ளார். இதனிடையே சுதிர்
குப்தாவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
சசிதரூரின் மனைவி சுனந்தா டில்லி ஓட்டல்
அறையில் பிணமாக
கிடந்தார்.
எய்ம்ஸ்
மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவராக உள்ள
சுதிர் குப்தா,
சுனந்தாவின் உடலை பிரதே பரிசோதனை செய்தார்.
சுனந்தாவின் கைகள் மற்றுள் கன்னத்தில் காயங்கள்
இருந்தன என்று
சுதிர் குப்தா
அறிக்கையில் கூறியிருந்தார். ஏனினும் இந்த காயங்களால்
மரணம் ஏற்பட்டதா
என்பதை அவர்
உறுதியாக தெரிவிக்கவில்லை.
இதையடுத்து சுனந்தாவின்
உடல் உறுப்புகள்
பற்றிய ஆய்வில்
அவர் அளவுக்கு
அதிகமாக சாப்பிட்ட
மாத்திரை விஷமாக
மாறியதாக கண்டுபிடிக்கப்பட்டது.
ஆறு மாதங்கள்
கழிந்த நிலையில்
சுனந்தாவின் மரணம் இயற்கையானது என அறிக்கை
அளிக்குமாறு தமக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக சுதிர் குப்தா தற்போது தெரிவித்து
உள்ளதே புதிய
சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனை எய்ம்ஸ்
மருத்துவமனை மறுத்துள்ளது. இந்த பிரச்னையில் எந்த நெருக்கடியும்
கொடுக்கவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
0 comments:
Post a Comment