அதிர்ச்சியைக்
கொடுத்த மின்சார சபை ஊழியர்
மின்பாவனையாளர்களே!
மாதாந்தம் உங்களுக்கு வழங்கப்படும் மின்சாரப் பட்டியலையும்
சற்று
பரிசீலியுங்கள்.
மின்சாரம்
மாத்திரம் அதிர்ச்சியைக் கொடுப்பதில்லை. அதில் கடமை செய்யும் ஊழியர்கள் சிலரும் மின்சாரப்
பட்டியலைக் கொடுக்கும்போது பாவனையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துவிடுகின்றார்கள்.
அதிகரித்த
மின்சாரப் பட்டியலைப் பற்றி இங்கு கூறவில்லை. நேற்று 19 ஆம் திகதி மின்சாரப் பட்டியலை
மின்சார சபை ஊழியர் ஒருவர் வழங்கும்போது அவர் பாவனையாளர்களுக்குக் கொடுத்த அதிர்ச்சியையே
இங்கு குறிப்பிடப்படுகின்றது.
இதுபற்றிய
விபரம் வருமாறு:-
குறிப்பிட்ட
மின்பாவனையாளர் சராசரியாக ஒரு மாதத்திற்கு ஆகக் கூடியது 85 தொடக்கம் 90 வரையிலான கூறுகள் மின்சாரத்தைப்
பாவிப்பது வழக்கம். இவர் மாதாந்தம் 1100 ரூபா அல்லது 1200 ரூபா எனக் கொடுப்பனவை அந்தந்த மாதத்திலேயே வங்கியில்
செலுத்திவிடுவார்.
நேற்று 19 ஆம் திகதி குறிப்பிட்ட மின் பாவனையாளருக்கு ஜூலை மாதத்திற்கான மின்சாரப் பட்டியல்
வழங்கப்பட்டது. அந்தப்பட்டியலில் அவர் ஜூலை மாதம் 185 கூறுகள் மின்சாரம் பாவித்ததாகவும்
இதற்கு 5918.50 செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மின்சாரப்
பட்டியலைக் கண்ட மின்பாவனையாளருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! ஏன் இவ்வாறு மின்
கட்டணம் பெரும் தொகையாக அதிகரித்துள்ளது?
பட்டியலில்
உள்ள கணக்குகளை மின்பாவனையாளர் உடனடியாக ஆராய்ந்தார். அதிகரித்த மின்கட்டணத்திற்கான
காரணத்தைக் கண்டறிந்தார்.
மின்சார
சபை ஊழியர் பாவனையாளருக்கு கொடுத்த மின்சார பட்டியலில் கடந்த மாதம் பாவிக்கப்பட்ட மொத்த
மின்சாரம் (மானி வாசிப்பு) 6489 கூறுகள்.
இந்த
மாதம் பாவிக்கப்பட்ட மொத்த மின்சாரம் (மானி வாசிப்பு) 6574 கூறுகள்.
ஜூலை
மாதம் பாவிக்கப்பட்ட மின்சார கூறுகள்
6574 – 6489 = 85 கட்டணம் 1084.40
ஆனால்
மின்சார சபை ஊழியரின் கணக்கின் படி
6574
– 6489 = 185 கட்டணம் 5918.50
இப்பிழையைச்
சுட்டிக்காட்டியதன் நிமிர்த்தம் திருத்தப்பட்டது.
பார்த்தீர்களா
மின்சாரம் மாத்திரம் அதிர்ச்சியைக் கொடுப்பதில்லை. அதில் உள்ள ஊழியர்களில் சிலரும்
அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றனர்.
மின்பாவனையாளர்களே!
மாதாந்தம் உங்களுக்கு வழங்கப்படும் மின்சாரப்
பட்டியலையும் பரிசீலியுங்கள்.
0 comments:
Post a Comment