பொது பல சேனா என்ற குப்பையைக் கூட்டி

நெருப்பு வைக்கும் காலம் நெருங்கிறது...!!

(துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)


பொது பல சேனா அமைப்பு நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது பொது பல சேனா அமைப்பானது மிகப் பெரிய அழுத்தத்தில் நிலை கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
"இரு குழுக்களுக்கிடையில் நடைபெற்ற சிறிய பிரச்சினை முழு நாட்டிற்கும் பரப்பி முஸ்லிம்கள் சர்வதேசத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்-கலபொட அத்தே ஞான சார தேரர்" அல்-ஹம்துலில்லாஹ்
எம் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தை சென்றடைந்துவிட்டதா?என்ற சந்தேகம் எமக்குள் சற்று காணப்பட்டது. எனினும்,அச் சந்தேகத்தை நிவர்த்திக்கும் பொருட்டு "உங்களவர்கள் சரியாக சேர்த்து விட்டார்கள்"என்ற நற் செய்தியை பொது பல சேனா அமைப்பின் செயலாளர் எமக்கு கூறியுள்ளார்.
சர்வதேசத்தின் அழுத்தம் பொது பல சேனா அமைப்பின் மீது பாய ஆரம்பிக்கும் போதே "இவர்கள் சர்வதேசம் கொண்டு விட்டார்களே!" என்ற அச்சம் தோற்றுவிக்கப்படும். அதற்கு இணங்க சர்வதேச ரீதியில்"பொது பல சேனா அமைப்பானது TRAC அமைப்பினால் பயங்கர வாத அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளமை""பொது பல சேனா அமைப்பின் இணையதள,முக நூல் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளமை""பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வினரிடம் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டமை""அமெரிக்க ஞானசார தேரரின் விசாவை ரத்து செய்தமை"ஆகியவற்றை குறிப்பிடலாம்.

எனவே,அவரின் இக் குற்றானது சர்வதேச சமூகத்திடம் பிரச்சினை கொண்டு சென்றுள்ளதால் ஏற்படப்போகும் விளைவின் அச்சத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது.
மேலும்,அவர் குறிப்பிடுகையில்
"எம்மைக் கைது செய்தால் முழு நாடும் கொந்தளிக்கும்"எனத் தெரிவித்துள்ளார்.ஞான சார தேரர் சில வேளை கைது செய்யப்படலாம் என்ற அச்சம் பொது பல சேனா விடம் ஏற்பட்டதன் விளைவின் கருத்தாகவே இவ் அவரது கருத்தை பார்க்க வேண்டியுள்ளது.தன்னை கைது செய்ய இயலாது என்ற நிலையில் அவர் இருப்பின் இக் கருத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை."ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரே தங்கள் பக்க நியாயங்களை செவிமடுத்தனர்.வேறு எவரும் கண்க்கெடுக்கவில்லை"
ஜனாதிபதி,பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் மாத்திரம் இவர்கள் கருத்தை செவிமடுத்து ஏனையேர் புறக்கணிக்கின்றனர் என இவர் கூறி இருப்பதானது தங்களை தங்கள் சமூகம் வெறுக்கிறது என்பதையே வெளிக்காட்டுகிறது.
மேலும்,ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இவர்கள் பக்க நியாயத்தை செவிமடுத்தார்களே தவிர ஏற்றார்கள் என இவர் குறிப்பிடவில்லை.ஏனையோர் கேட்கக் கூட தயாரில்லை என்றால் எந்தளவு பொது பல சேனா மீது மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள் என்பதை அவர்கள் வாயிலாகவே விளங்கிக் கொள்ளலாம்.

அல்-ஹம்துலில்லாஹ்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top