காலத்தின் தேவை
முஸ்லிம் பெண் மகப்பேற்று
மருத்துவர்களின் அத்தியாவசியத் தேவை.

மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்

ஒரு காலம் இருந்தது அந்தக் காலத்தில் மருத்துவிச்சி என்று சொல்லப்படுகின்ற பாட்டிமார்களின் உதவியைக் கொண்டு வீட்டிலேயே சுகப் பிரசவம் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள் நம் தாய்மார்கள்நாம் எல்லோரும் பெரும்பாலும் அப்படித்தான் பிறந்திருப்போம்.ஆனால் இன்று கருவில் குழந்தை உருவான நாள் முதல் அந்தக் குழந்தை இந்தப் பூமியை தொடும் காலம் வரை எந்நேரமும் நம் பெண்கள் மகப்பேற்று வைத்தியரையே அனுக வேண்டும்.
கணவன்மார்கள் யாரோ ஒரு அந்நிய ஆணிடம் அல்லது பெண்னிடம் தன் மனைவிமார்களை மகப்பேற்று மருத்துவ ரீதியான அத்தனை செக்கப்புகளுக்கும் அழைத்துச் சென்று செக்கப் முடியும் வரை வெளியில் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
வைத்தியர் என்ற ரீதியில் அந்நிய ஆணாக இருந்தாலும் அது தவறான விடயமல்ல ஆனால் நாம் அனைவரும் ஒரு கணம் இங்கே சிந்திக்க கடமைப் பட்டிருக்கின்றோம் அதாவது இந்த இடத்தில் முஸ்லிம் பெண் மருத்துவர்கள் இருந்தால் அது எவ்வளவு பெரிய ஆறுதலான ஒரு விடயமாகவும்காலத்தின் கட்டாயத் தேவையாகவும் இருக்கும் என்று.

எமது சுற்று வட்டாரத்தை உற்று நோக்குங்கள் கல்முனைசம்மாந்துறைசாய்ந்தமருதுமருதமுனைஅக்கரைப்பற்று மற்றும் நிந்தவூர் போன்ற அனைத்து ஊர்களிலும் முஸ்லிம் பெண் மகப்பேற்று மருத்துவர்களின் எண்ணிக்கை விரல்விட்டும் எண்ண முடியாத அளவுக்கே இருக்கிறதுவெளிப்படையாக சொல்லப்போனால் அந்தத் துறைக்கு யாருமே இல்லை.
மகப்பேற்று மருத்துவம் என்பது வெறுமையாக ஒரு தொழில் மாத்திரமல்ல அது ஒரு பாரிய சமூகப்பணிஅந்த சமூகப்பணிக்கு எம் பெண் பிள்ளைகளையும் நாம் படிக்க வைக்க வேண்டும்அவர்களையும் அத்துறைகள் சார்பாக ஊக்குவிக்க வேண்டும் ஆனால் பொதுவாக முஸ்லிம் பெண்கள் வைத்திய துறையில் நாட்டம் அற்றவர்களாக இருப்பார்கள் அவர்கள் பெரும்பாலும் நாட்டம் கொள்வது ஆசிரியைத் துறை அல்லது ஏதேனும் அலுவலக துறைதான்.
இதற்குக் காரணம் என்ன...????
பெற்றோர் பெண் பிள்ளைகளை வைத்திய துறைக்கு படிக்க வைத்து அந்தப் பெண் வைத்தியராக ஆன பின்பு அந்தப் பெண்னுக்கு கண்டிப்பாக ஒரு வைத்தியரான கணவரையோ அல்லது பொறியிலாளரான கணவரையோதான் மணம் முடித்துக் கொடுக்க வேண்டும் அது அல்லாத எந்தத் துறையினரும் அந்த பெண்னுக்கு பொருத்தமாக மாட்டார்கள்.
அந்த வைத்தியப் பெண்னுக்கு ஒரு வைத்திய மாப்பிள்ளையை பார்க்கிறார்கள் என்றால்அவர்கள் கைவசம் குறைந்தது பத்து ஏக்கர் காணி இருக்க வேண்டும்கண்டிப்பாக ஒரு கார் இருக்க வேண்டும்நல்ல மாடி வீடு கட்டியிருக்க வேண்டும் மற்றும் நல்ல காசும் வசதி வாய்ப்பும் இருக்க வேண்டும்அப்போதுதான் அந்த வைத்தியப் பெண்னுக்கு மணமகனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதான் இன்று நம் சமூகத்தில் இருக்கும் ஆகப் பெரிய பிரச்சனையாகும்இவ்வாறான சூழ்நிலையில் எப்படி பெற்றோர் தன் பெண்பிள்ளைகளை வைத்திய துறைக்கு படிக்க வைப்பார்கள்...?? ஆசிரியை ஆக்கி விட்டால் அந்தப் பெண்னுக்கு அதன் தராதரத்துக்கு ஏற்ற மாப்பிள்ளையை எடுத்து விடலாம் ஆனால் வைத்தியராக இருந்தால்...??? நான் மேற்சொன்ன எல்லாம் கொடுக்க வேண்டுமே
பணக்காரவர்கள் தன் பெண் பிள்ளைகளை வைத்திய துறைக்கு படிக்க வைக்கலாம்வைத்திய மாப்பிள்ளையை அந்தப் பெண்னுக்கு பார்க்கலாம் மேலும் அந்த மாப்பிள்ளை கேட்டதெல்லாம் கொடுக்கலாம் ஆனால் ஏழைக் குடும்பம்...????
வைத்தியத்துறை மாத்திரமல்ல இன்று எந்தத் துறையை எடுத்தாலும் அதில் எமது முஸ்லிம் சமூகம் உயர்பதவிகள் வகிப்பதையிட்டு பின்நோக்கியே இருக்கின்றார்கள்இது ஒரு சாதாரண சமூகப் பிரச்சனை கிடையாது மாறாக நாம் அனைவரும் இதன் தேவையை உணர்ந்து அதன் பால் நம் பிள்ளைகளை வழிநடாத்த வேண்டிய கட்டாய கடைமைப்பாட்டோடும் இருக்கின்றோம்சிந்திப்பார்களா?







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top