சாய்ந்தமருது -15 இல் சிரேஸ்ட பிரஜைகள் சங்கம் ஆரம்பம்

ஏ.எல்.முக்தார் (ஜஹான்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத் தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஜெமீல் தலைமையில் சிரேஸ்ட பிரஜைகள் சங்கம் நேற்று 22.05.2016ம திகதி ஞாயிற்றுக் கிழமை அவரது சொந்தப் பிரிவான சாய்ந்தமருது-15 இல் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிரேஸ்ட பிரஜைகள் சமூகத்திடையே இன்று மதிக்கப்படாமை,அரசியலில் ஓரங்கட்டப்படுகின்றமை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே குறித்த சங்கம் அ.இ.ம.காவின் வழி காட்டலின் கீழ் கலாநிதி ஜெமீலினால் சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச் சங்கத்தின் தலைவராக முன்னாள் ஓய்வு பெற்ற அதிபரும் முன்னாள் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ்  மத்திய குழுத் தலைவருமான எம்.எம் காசீம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
இதன் பொது உரையாற்றிய வர் எம்.எம் காசீம் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸும்  அதன் தலைமைத்துவமும்  சாய்ந்தமருது மக்களை சாதுரியமாக   ஏமாற்றி வருகின்றது. இதன் பிறகும் நாம் அவர்களை நம்பி  ஏமாறாது அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும்  அக்கட்சியின் தலைமைத்துவத்தையும் இக் கட்சியின்  பிரதித் தலைவரான கலாநிதி ஜெமீலையும் பலப்படுத்த சிரேஸ்ட பிரஜைகளாகிய நாம் ஒன்றுபட்டு பாடுபடல் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இன்ஷா அல்லாஹ் இது போன்று ஏனைய பிரிவுகளிலும் கட்டம் கட்டமாக இச் சங்கம் அமைக்கப்படுமென கலாநிதி ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.
இச் சங்கம் இவ்வாறு அமைக்கப்பட்டமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமென பலராலும் பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது.

இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  எதிர்ப்பார்பையும் விஞ்சிய சிரேஸ்ட பிரஜைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top