'மூன்றாவது திருமணமும் 300 கோடி ரூபாய் சொத்துக்களும்!'
அதிமுக எம்.பி. அன்வர்ராஜாவுக்கு
மும்பை பெண்ணுடன்
3-வது திருமணம்
ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.பி.யான 71 வயது அன்வர் ராஜா மும்பையைச் சேர்ந்த பெண்ணை 3-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். அன்வர் ராஜா முதல் மனைவியை விவகாரத்து செய்து தாஜிதா என்பவரை 2-வது திருமணம் செய்தார். தாஜிதா கடந்த ஆண்டு காலமானார். அன்வர் ராஜாவுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் அன்வர் ராஜா குர்ஷித் பானு என்ற மும்பையைச் சேர்ந்த பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் வீட்டில் எளிதாக நடைபெற்றது. இத் திருமணத்திற்கு அவரது மகன்கள், மகள்கள், மற்றும் பேரன், பேத்திகள் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தனர். அன்வர் ராஜா ராமநாதபுரம் பனைகுளத்தை சேர்ந்தவர். தமிழக அமைச்சராக இருந்தவர். தற்போது அதிமுக சிறுபான்மை பிரிவு செயலர் மற்றும் ராமநாதபுரம் தொகுதி எம்பியாகவும் உள்ளார்
இவரின் திருமணம் தமிழ் நாட்டில் அ.தி.மு.க வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது. ' அன்வர் ராஜாவின் சொத்துக்களுக்கு பங்கு கேட்டு புதிதாக ஒருவர் வந்துள்ளதை, அவரின் குடும்பத்தினர் விரும்பவில்லை' என்கின்றனர் ராமநாதபுரம் அ.தி.மு.கவினர்.
இதுபற்றி பேசிய ராமநாதபுரம் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " எம்.பியின் முதல் மனைவி உயிரோடு இருக்கிறார். அவரை முன்பே விவாகரத்து செய்துவிட்டார். இரண்டாவது மனைவி தாஜிதா பேகம் இறந்து ஒரு வருடம் கூட முடியவில்லை. இவர்களுக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஐந்து பேரப் பிள்ளைகள் உள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சுற்றிலும் அன்வர்ராஜாவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை என்ற பெயரில் ஆசிரியர் பயிற்சிப்பாடசாலை, பி.எட் கல்லூரி, பள்ளிகள் ஆகியவை உள்ளன. இவை தவிர, நிலம், வீடு என சுமார்
300 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் உள்ளன.
தற்போது திருமணம் செய்த சமீரா சுல்தானுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். ' இவர்கள் சொத்துக்கு பங்கு கேட்டு வந்துவிடுவார்களோ' என அன்வர்ராஜாவின் வாரிசுகள் பயந்தனர். எம்.பியின் ஒரு மகளுக்கு, அரசுத் துறையில் பதவி வகிக்கும் ஒருவரது குடும்பத்தில் சம்பந்தம் வைத்துள்ளனர். அவர்களுக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. திருமண நிகழ்வுக்கும் அவர்கள் வரவில்லை. ' அன்வர்ராஜாவை எதிர்த்து எதுவும் பேசிவிட முடியாது' என்பதால் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர்.
எம்.பி யின் மூன்றாவது மனைவி, மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 35 என ஒரு சிலர் சொல்கின்றனர். எம்.பியோ, ' அவருக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டது' என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாகவே திருமணம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பேச்சுவார்த்தை முடிவில், ' அன்வர்ராஜாவின் சொத்துக்கள் எதுவும் சமீராவுக்குக் கிடையாது. எம்.பி பதவியில் இருந்து வரும் பென்சன் மட்டுமே, அவருக்குச் சென்று சேரும். வேறு எந்த வகையிலும் உரிமை கொண்டாடக் கூடாது' என முடிவு செய்துள்ளனர்.
அவரும் இதை ஏற்றுக் கொண்டார். ஆனால், அவரது இந்தச் செயல், வீட்டில் உள்ள பேரன், பேத்திகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தாதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அன்வர்ராஜா எம்.பி. " என்னுடைய குடும்பத்தினரின் சம்மதத்துடன்தான் திருமணம் நடந்தது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. ராமநாதபுரத்தில் எனக்கு வேண்டாதவர்கள் எவ்வளவோ சொல்வார்கள். பெண் பெயரையும் வயதையும் தவறாக எழுதுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சம்பந்தமில்லை என்று சொல்வது விஷமத்தனமான பேச்சு. அனைவரும் இணைந்துதான் இந்த முடிவை எடுத்தார்கள்" இஸ்லாமிய சட்டத்தில் நான்கு திருமணங்கள் வரை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனது மனைவி 10 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். அவருக்கு நான் பணிவிடை செய்தேன். அப்போது, அவரே என்னிடம் வேறு திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்தார். எனது பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் இருப்பதால், எனக்கு ஆதரவாக திருமணம் செய்து வைக்க எனது மகன்கள் மற்றும் மகள்கள் விரும்பினர். அதன்படி முறையாக ஜமாத்தில் பதிவு செய்து இந்த திருமணத்தை செய்துள்ளேன். எனது மனைவி சமீரா சுல்தான் எம்.எஸ்.சி., எம்.ஏ., பி.எட்., படித்தவர். ஐந்து மொழிகளில் பேசும் திறன் பெற்றவர். அவருக்கு தற்போது, 50 வயதாகிறது, என்று தெரிவித்துள்ளார் நிதானமாக.
அன்வர்ராஜா அரியானாவை சேர்ந்த குர்ஷித் பானு, 35, என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள எம்.பி.,யின் வீட்டில் திருமணம் நடந்தது.
குர்ஷித் பானு மதுரையில் வசித்து வந்தார். டுபாயில் பணிபுரிந்த இவரது கணவர், ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில், அன்வர்ராஜா நடத்தும் கல்வி நிறுவனத்தில் பணி கேட்டு குர்ஷித் பானு அணுகினார். அவருக்கு, மதுரை தனியார் பள்ளியில் பணிக்கு ஏற்பாடு செய்தார்.


0 comments:
Post a Comment