ரசிகரின்  கன்னத்தில் ஓங்கி அறைந்த  விஜயகாந்த்!



விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியால் நடைபெறுகிறது. இதற்கான படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்வதற்காக விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும், மலேசியா சென்று இருந்தனர்.
அங்குள்ள ஓட்டலில் தங்கியருந்த அவர்களை, மலேசியாவில் உள்ள விஜயகாந்த் ரசிகர்கள் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். இதற்காக விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவிடம் முன் அனுமதி வாங்கியிருத்த்தாகவும் கூறப்படுகிறது.
அதன்படி ரசிகர்கள் ஒருவர் பின் ஒருவராக விஜயகாந்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர், அப்போது ஒரு ரசிகர் திரும்ப திரும்ப வந்து  அவருடன் வெவ்வேறு கோணத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தாராம்.
இதனால் கோபமடைந்த விஜயகாந்த், ஷாஜகான் என்ற அந்த ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து  அதிர்ச்சி அளித்தார்.
இதை எதிர்பார்க்காத ஷாஜகான் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பிரேமலதாவிடம், நடந்த விஷயத்தை சொன்னார்கள் மற்றவர்கள்.‘ஏங்க இப்படி பண்ணுனீங்க?‘ என்று பிரேமலதா கோபத்துடன் விஜயகாந்திடம் கேட்க, அதற்கு அவர், ‘இப்ப என்ன, மன்னிப்பு கேட்கணுமா...? ஸாரி... ஸாரி... ஸாரி... போதுமா?‘‘ என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.‘தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு சொல்வாரே...‘ என்று முணு முணுத்தபடியே அவர்கள் திரும்பினர். நாடு கடந்து வந்த விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்கச் சென்றால், இப்படியா பண்ணுவார் என்று ஷகில், ஷாஜகான் உள்ளிட்ட மலேசிய தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி பலர் சமூக வளைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top