ஐக்கிய அமெரிக்க பிரதிச் செயலாளருடன்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

அமைச்சரின்இணைப்புச் செயலாளர் றகுமத் மன்சூர்

ஐக்கிய அமெரிக்க பிரதிச் செயலாளர் அட்டுல் கெஷாப், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் ஜே சீசன், மற்றும் அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவிற்கான உயர் அதிகாரிகள் ஆகியோர்களுடன் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இன்று காலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார்.
இச்சந்திப்பில் ஒரு சில தினங்களுக்கு முன் பேருவளை, தர்கா டவுன், அளுத்கமை, வெயாங்கல்லை பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றியும் இதன் பின்புலம் பற்றியும் இயங்கி வரும் தீய சக்திகள் பற்றியும் முஸ்லிம்களின் பாதுகாப்புச் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றகுமத் மன்சூர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top