கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக
முன்னாள்
அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரை நியமிக்குமாறு
தமிழ் பேசும்
புத்திஜீவிகள் கோரிக்கை
கிழக்கு
மாகாணத்தின் ஆளுநராக வர்த்தக, வாணிபத்துறை
அமைச்சராகவும், முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும்
திறம்படப் பணியாற்றிய ஏ.ஆர்.மன்சூரை நியமிக்க வேண்டும் என தமிழ் மொழி பேசும் தமிழ்,
முஸ்லிம் புத்திஜீவிகள் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள்
அமைச்சர் எ.ஆர்.மன்சூர், தமிழர்களின் அபிலாசைகளையும்
உணர்வுகளையும் நன்றாக அறிந்தவர்.. தமிழ் பாடசாலகளில்
தமிழ் மாணவர்களோடு
ஒன்றாகக் கல்வி
கற்றவர். பொது
வாழ்வில் பெருந்தலைவர்கள்
என்று கூறக்
கூடிய எஸ்.ஜெ.வி செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம்,
கொல்வின் ஆர்
டி சில்வா போன்ற சிறந்த சட்டத்தரணிகளுடன்
நெருங்கிப் பழகி பல அனுபவங்களைப் பெற்றவர்.
இவர் யாழ்ப்பாணம்
மற்றும் முல்லைத்தீவு
ஆகிய மாவட்டங்களுக்கு
மாவட்ட அமைச்சராகப்
பதவி வகித்து
அனுபவங்களைக் கொண்டிருப்பதுடன் தமிழ் மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.
கறை
படியாத கரங்களையும் கருணை உள்ளத்தையும் கொண்டவருமான ஏ.ஆர். மன்சூர் அவர்களே மூவின மக்களும்
வாழும் கிழக்கு மாகாணத்தில் ஆளுநராகப் பதவி வகிப்பதற்கு முற்றிலும் தகுதி உள்ளவர்.
எனவே
எ.ஆர்.மன்சூர் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்து இம்மாகாணத்தில் இன ஒற்றுமையை
வளர்க்க வேண்டும் என தமிழ் மொழி பேசும் புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment