முஸ்லிம் சமய கலாச்சார சகல தேவைகளையும்

ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு

அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்

முஸ்லிம் சமய கலாச்சார சகல தேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ளது என்று தபால், தபால் சேவை மற்றும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்..ஹலீம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 9 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

வக்ப் சபை, வக்ப் நீதிமன்றம், ஹஜ்குழு உட்பட திணைக்களம் சார்ந்த சகல துறைகள் சார்ந்த விடயங்களுக்கான பணிகள் இக்கட்டிடத்திலேயே இடம்பெறும். இதன்மூலம் பொதுமக்கள் வசதியாக தமது தேவைகளை ஒரே கூரையின் கீழ் மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top