அம்பாறை மாவட்டத்தின் சாரதிகளும் நாங்களே!
நடத்துனர்களும் நாங்களே!!
மாவட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய
முக்கிய பிரச்சினைகள்
அம்பாறை
மாவட்ட முஸ்லிம்கள்
மத்தியில் நீண்டகாலமாக
பல பிரச்சினைகளும்
தேவைகளும் இருந்து
கொண்டிருக்கின்றன. அவைகளில் சில
:-
-பொத்துவில்
முஸ்லிம்களின் பூர்வீக காணிப்பிரச்சினை (இறத்தல், கரங்கோ,
பொத்தான, தகரம்பொல,
உடும்புக்குளம் ஆகிய காணிகள்) முஸ்லிம் மீனவர்
பிரச்சினை, பாதுகாப்புத் தரப்பினரால் எதிர்நோக்கும் அசௌகரியங்களை
உடன் தீர்த்து
வைத்தல்.
-அக்கரைப்பற்று
- முஸ்லிம்களின் வட்டமடு மேச்சல் தரை மற்றும்
விவசாயக் காணிகளை
பெற்றுக் கொடுக்க
வேண்டும்
-முன்னாள்
அமைச்சா் பேரியல்
அஸரபினால் சவூதி
அரசினால் வழங்கப்பட்ட
500 வீடுகள் கொண்ட சுனாமி வீடமைப்புத்
திட்டம் வீடில்லாமல்
வாழும் முஸ்லீம்
குடும்பங்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படல்
வேண்டும்.
-சம்மாந்துறை
வங்களாவடிப் பிரதேசத்தில் இளைஞா்களுக்கான
தொழில் வசதி
வாய்ப்புக்கான தொழில் பேட்டைகள்
- நுரைச்சோலையில்
முஸ்லிம்களால் செய்யப்பட்டு வந்த விவசாய நடவடிக்கைகளை
தொடர்ந்து மேற்கொள்ள
பொருத்தமான தீர்வை வழங்க வேண்டும்.
- அட்டாளைச்சேனை
- அஷ்ரப் நகரில்
உள்ள முஸ்லிம்களுக்குச்
சொந்தமான காணிகளை
இராணுவத்திரடமிருந்து மீட்டுத் தர
வேண்டும்.
- ஒலுவில துறைமுகத்திட்டத்தினால்
பாதிப்படைந்துள்ள முஸ்லிம்களுக்கு உடன் நஷ்டஈட்டை பெற்றுக்கொடுத்தல்,
கடலரிப்பை தடுக்க
உரிய திட்டத்தை
வகுக்க வேண்டும்.
- ஓலுவில்
துறைமுகம் மீன்பிடித்துறைமுகமாக
செயல்படுத்த நடவடிக்கை எடுத்தல்
- கல்முனை
அஸ்ரப் வைத்தியசாலையில்
நீண்ட காலமாக
நிலவிவரும் வைத்தியர், தாதியா் விடுதிகள் மற்றும்
கட்டிட வசதிகள்
இன்மை அவைகள் தீர்க்கப்படல் வேண்டும்.
- கல்முனை
ஸாஹிறாக் கல்லுரிக்கு கட்டிடங்கள்
மற்றும் கூட்ட
மண்டபம், மைதாணம்
போன்ற குறைபாடுகள்
நிவா்த்தி செய்யப்படல்
வேண்டும்.
சம்மாந்துறை தபாலகத்திற்கு நவீன கட்டடம் அமைக்கப்படல்
வேண்டும்.
-சாய்ந்தமருதுக்கான
தனியான நகர சபையை பிரகடனப்படுத்துவதற்கான
கால எல்லையை
அறிவிக்க வேண்டும். நம்பகத்தன்மையுடன் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- சாய்ந்தமருது,
கல்முனைக்குடி, இஸ்லாமாபாத் ஆகிய பிரதேச முஸ்லிம்கள்
எதிர்நோக்கும் குடியிருப்பு நிலப் பற்றாக்குறை பிரச்சினையை
தீர்ப்பதற்கான செயலணியை உருவாக்க உத்தரவிட வேண்டும்.
- மருதமுனை
சுனாமி வீடமைப்புத்
திட்டத்தை உண்மையாக
பாதிப்புற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
-கல்முனை
சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவந்து சர்வதேச
தரத்திற்கு அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்
- கல்முனை
நகர அபிவிருத்தி
திட்டத்தின் கீழ் கல்முனை நவீன நகரமாக
நிர்மாணிக்கப்படல் வேண்டும்.
- கல்முனை
மாநகர சபைக்கு
சகல வசதிகளும்
கொண்ட செயலகம்
நிர்மாணிக்கப்படல் வேண்டும்
- சம்மாந்துறை
- அம்பாறை நகருக்கிடைப்பட்ட
முஸ்லிம்களின் விவசாயக் காணிப்பிரச்சினையை
தீர்க்க வேண்டும்
- வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பணியகம் தரமுயா்த்தப்பட்டு கல்முனையில் மீள
ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
- மட்டக்களப்பு
புகையிரத பாதை
கல்முனை- பொத்துவில்
வரை விஸ்தரிக்கப்படல்
வேண்டும்.
- அட்டாளைச்
சேனையில் உள்ள
கல்விக் கல்லுாரி
ஆசிரிய பல்கலைக்கழக
கல்லுரரியாக தரமுயத்தப்படல் வேண்டும். அத்துடன் ஆசிரிய
பயிற்சிக் கலாசாலையை
அபிவிருத்தி செய்தல்,
- யுத்த
காலத்தில் பயங்கரவாதிகளினால்
உயிழந்தவா்களுக்கு நஸ்ட ஈடு
மற்றும் உயிரிழந்து
முஸ்லிம் பொலிஸ்,
ஊர்காவல் படை
அவா்களது குடும்பங்களுக்கு
நஸ்ட ஈடுகள்
மற்றும் வீடமைப்புத்
திட்டங்கள்
- கல்முனையில்
உள்ள நகர
அபிவருத்தி உப அலுவலகமும் தேசிய வீடமைப்பு
அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகமும்
கரையோர மாவட்ட
அலுவலகமாக தரமுயா்த்தப்படல்
வேண்டும்.
-சாய்ந்தமருதில் படகு தரிப்புத்துறை, ஜஸ்
தொழிற்சாலை நிர்மாணிக்கப்படல் வேண்டும்.
- சாய்ந்தமருது
தொட்டு காரைதீவு,
நிந்தவூர்வரையிலான, தோணா மற்றும்
அதனிடையே வரும்
பாலங்கள் மற்றும்
இருமருங்கிலும் செப்பணிட்டு பூங்காங்கள் அமைத்து அழகுபடுத்தப்படல்
வேண்டும்.

0 comments:
Post a Comment