சாரதியும்
நாங்களே! நடத்துநர்களும் நாங்களே!!
சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியிலுள்ள ஒரு ஒடுக்கமான பாலம்
நல்லாட்சியில் நிச்சயம் திருத்தப்பட்டுவிடும் மக்கள் நம்பிக்கை
மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது பழைய ஆஸ்பத்திரி வீதியிலுள்ளதோணாவுக்கு மேலாக குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு ஒடுக்கமான பாலமே இது!
இப்பாலத்தின் ஊடாகத்தான் பழைய ஆஸ்பத்திரி உப தபாலகம், க/மு றியாலுல் ஜன்னா வித்தியாலயம், தலைவர் அஷ்ரஃப் ஞாபகர்த்த பூங்கா என்பனவத்திற்கு செல்ல வேண்டும்.
அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியான நிலையில் விரிவாக்கப்படல்வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் விருப்பமாகும்.
இப்பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இம்மாவட்டத்தின் சாரதியும் நாங்களே! நடத்துநர்களும் நாங்களே!! என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
இக்கருத்தை எந்த அர்த்தத்தில் எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் குறிப்பிட்டார்களோ தெரியாது. ஆனால், மக்களோ மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்வதற்கு இக்கருத்தை கூறியிருக்கலாம் என நம்பியுள்ளனர்.
மாவட்ட மக்களின் நம்பிக்கையை ஏமாற்றிவிடாமல் இந்த ஒடுக்கமான பாலம் தற்போதய நல்லாட்சியில்நிச்சயம் திருத்தப்பட்டுவிடும் என மக்கள் நம்பியுள்ளனர்.
மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment