கல்முனை அபிவிருத்தி திட்டம்

ரூ 500 மில்லியன் . 4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்

இன்றுடன்  7 மாதங்களும் 17 நாட்களும் கடந்துவிட்டன

உருப்படியான அபிவிருத்திகள் எதுவுமே இல்லை!

கல்முனைப் பிரதேச மக்கள் கவலை தெரிவிப்பு!!

நான்கு மாதங்களுக்குள் 500 மில்லியனில் கல்முனை புதிய நகர் அபிவிருத்தி திட்டம் ஜூலை 15 முதல் தொடக்கம் என மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது..
அதுமாத்திரமல்லாமல் ரூ 500 மில்லியனை . கல்முனை புதிய நகர் அபிவிருத்திக்காக 4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு கூறப்பட்டிருந்தது.
கல்முனை புதிய நகர் அபிவிருத்தி திட்டம் ஜூலை 15 முதல் தொடக்கம் என செய்தி வெளியாகியதை அடுத்து கல்முனைப் பிரதேச மக்கள் கல்முனையை அபிவிருத்தி செய்து அழகு படுத்தப்போகின்றார்கள். பொழிவு இழந்து காட்சி தரும் கல்முனை பொதுச் சந்தை மிளிரப் பொகின்றது. எமது மாநகர சபைக்கு நவீன கட்ட்டம் வரப் போகின்றது,கல்முனை மக்கள் மண்டபம் புதுப் பொழிவு பெற்று அழகு பெறப் போகின்றது என்றெல்லாம் மக்கள் சந்தோஷமடைந்தனர்.
ஆனால், கல்முனையில் இடம்பெற்றது அபிவிருத்தி வேலைகள அல்ல நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் மட்டும்தான்!
2016  ஜூலை 15ஆம் திகதியிலிருந்து இன்று 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதியுடன் 7 மாதங்களும் 17  நாட்களும் கடந்துவிட்டன.

ரூ 500 மில்லியனை . கல்முனை புதிய நகர் அபிவிருத்திக்காக 4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று எமது மக்கள் பிரதிநிதிகளால் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த்து ஒரு ஏமாற்று நடவடிக்கையா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்..
.
கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் என  கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி  கல்முனை மாநகர சபைக் கட்டடத்தில் நகர திட்டமிடல்,நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் சுகாதர சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம்,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்,பாராளுமன்ற உறுப்பினர் MIM.மன்சூர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள்,மாநகர சபை முன்னாள் மேயர்,முன்னாள் பிரதி மேயர்,முன்னாள் உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் உயர் அதிகாரிகள் என பலரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இக்கூட்த்தில் கல்முனை அபிவிருத்தி சம்மந்தமாக பல திட்டங்களைச் செய்யப்போவதாக முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்து.



இதோ இது சம்மந்தமாக ----------- 

Sarjoon Lafeer  அவர்கள் தனது முகநூலில் வெளியிட்ட பதிவு முக நூல் நண்பர்களின் பார்வைக்கு .........


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top