இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்

தண்ணீர் பௌசர்கள்
                                                                                                                     
வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு தேவையான குடிநீர் விநியோகத்துக்காக இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 08 தண்ணீர் பௌசர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் நேற்று 21 ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து அவர்களால் குறித்த தண்ணீர் பௌசர்களுக்கான ஆவணங்கள் மற்றும் சாவிகள் அடையாளமாக ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top