உலகிலேயே அதிக எடை கொண்ட கருப்பை நீர்க்கட்டி:
வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை
Is THIS the world's biggest cyst? Woman, 24, with ovarian
growth weighing the same as TEN BABIES has it removed after it crushes her
organs
WARNING: GRAPHIC CONTENT
Unnamed patient, from Mexico, had growth that took up 95% of her abdomen
It grew ferociously over just eleven months and eventually weighed five
stone
Surgeons removed it whole because they feared it contained toxic liquid
Doctors now believe its the world's biggest cyst ever to be removed in tact
மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு பெண்மணிக்கு, அதிக எடையுள்ள கர்ப்பப்பை நீர்க்கட்டியினை அந்நாட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டினை சேர்ந்த 24வயது பெண்மணி அதிகளவு உடல் எடையினை குறைப்பதற்காக டயட்டில் இருந்தபோதும் அவரின் உடல் எடை அதிகரித்துள்ளது.
இந்த டயட்டால், இவரது கை மற்றும் கால்கள் மெலிவடைந்தாலும் வயிறு மட்டும் பெரிதாகி கொண்டே சென்றுள்ளது.
இதனால் அவரால் சரியாக சாப்பிட இயலாமல், நடக்க இயலாமல், சுவாச கோளாறுகளால் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளார்.
11மாதங்களுக்கு பின்னர், மெக்சிகோ பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவர் Dr. Erik Hanson மூலம் சோதனை செய்ததில் 157செமீ சுற்றளவு கொண்ட அவரின் வயிற்றில் 33கிலோ எடையுள்ள நீர்க்கட்டி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் பின்னர், அந்த கட்டியானது அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. உலகிலேயே அதிக அளவு எடையுள்ள நீர்க்கட்டியினை அகற்றுவது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த அறுவைக்கு சிகிச்சைக்கு பின்னர் தான் நலமாக இருப்பதாகவும், உடல் எடை குறைந்து, எந்த உடல்நலக் கோளாறுகளும் இல்லை என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment