கண்டியில் போன்று கல்முனையிலும்
அரசாங்கத்திற்கு நாளை 12 மணி வரை காலக்கெடு
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி
அம்பிட்டியே சுமனரத்ன தேரர் எச்சரிக்கை

நாளை 12 மணிக்குள் கல்முனை தமிழர்களுக்கு தீர்வு கிட்டவேண்டும் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தேரர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்..

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி கல்முனையில் சர்வ மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் குறித்த போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இப்போராட்டக் களத்திற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் நேரில் சென்று ஆதரவு வழங்கியுள்ளார்.

இதன்போது பேசிய அவர், நாளை 12 மணிக்குள் கல்முனை தமிழர்களுக்கு தீர்வு கிட்டவேண்டும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top