கல்முனையில் தமிழ்-முஸ்லிம்
பிரதிநிதிகளைச் சந்தித்த
ரத்ன தேரர்
நாடாளுமன்ற
உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தரப்புடன் கல்முனை மாநகரசபை
கட்டிடத்தில் விஷேட சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
கல்முனை
உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம்
செய்த அதுரலிய ரத்ன தேரர், முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
எச்.எம்.எம்.
ஹரிஸ் எம்பி கொழும்பில் இருப்பதாக சொல்லப்பட்டதையடுத்து அவரை தொலைபேசியினூடாக
தொடர்புகொண்ட ரத்தன தேரர் , கல்முனை விவகாரம் குறித்து பேச வேண்டுமெனவும் அதற்குரிய பிரதிநிதிகளை
தருமாறு கேட்டுள்ளார்.இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை கல்முனை மாநகர சபை
மேயரின் அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது
கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான இறுதி முடிவினை ஆராய்ந்து இவ்விரு சமூக
பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என சந்திப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
0 comments:
Post a Comment