ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.
விளக்கம்:
ஒழுக்கம்
எப்போதும் மேன்மையைத்
தருவதாகும். அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச்
சான்றோரால் காக்கப்படும்.
பரிந்தோம்பிக் காக்க
ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
விளக்கம்:
வருந்தியேனும்
ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். பலவும்ஆராய்ந்து
கைக்கொண்டு தெளிந்தாலும்,ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும்.
ஒழுக்கம் உடைமை
குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
விளக்கம்:
ஒழுக்கம்
உடையவராக இருப்பதே
உயர்ந்த குடிபிறப்பின்
தன்மை ; ஒழுக்கம்
கெடுதல் இழிந்த
பிறப்பின் தன்மையாகி
விடும்.
மறப்பினும் ஒத்துக்
கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
விளக்கம்:
கற்றதை
மறந்தாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால், வேதமோதுவான்
பிறப்பால் வந்த
உயர்வு அவன்
ஒழுக்கம் குன்றினால்கெடும்.
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
விளக்கம்:
பொறாமை
உடையவனிடத்திலே ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம்
இல்லாதவன் வாழக்கையிலும்
உயர்வு இல்லை
ஒழுக்கத்தின் ஒல்கார்
உரவோர் இழுக்கத்தின்
ஏதம் பாடுபாக் கறிந்து.
விளக்கம்:
மன
வலிமை உடையவர்,
ஒழுக்கம் குன்றுதலால்
குற்றம் நேரிடுதலை
அறிந்து, ஒழுக்கத்திலிருந்து
ஒரு போதுமே
பிறழ மாட்டார்கள்.
ஒழுக்கத்தின் எய்துவர்
மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
விளக்கம்:
ஒழுக்கத்தால்
எல்லாரும் மேன்மை
அடைவார்கள்; ஒழுக்கக் கேட்டால் அடையத்தகாத பழியை
அடைவார்கள்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
விளக்கம்:
நல்ல
ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும்
; தீய ஒழுக்கமோ
எக்காலத்தும் துன்பத்தையே தரும்.
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே
தீய வழுக்கியும் வாயாற் சொலல்.
விளக்கம்:
தீய
சொற்களைத் தவறியும்
தம் வாயினாற்
சொல்லும் குற்றம்,
நல்ல ஒழுக்கம்
உடையவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாத பண்பாகும்.
உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலர் தார்.
விளக்கம்:
உலகத்தவரோடு
பொருந்தி ஒழுகும்
தன்மையை அறியாதவர்,
பல நூல்களை
கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.
0 comments:
Post a Comment