மீண்டும் அமைச்சுப்
பதவிகள்!
கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி
நிறைவு
மீண்டும்
பதவிகளை ஏற்பது
தொடர்பான கலந்துரையாடல்
இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக நாடாளுமன்ற
உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப்
பதவிகளில் இருந்து
விலகிய முன்னாள்
முஸ்லிம் அமைச்சர்கள்,
பிரதி அமைச்சர்கள்
கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த
கலந்துரையாடல் நேற்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத்
தொகுதியில் நடைபெற்றுள்ளது.
இது
தொடர்பில் கலந்தலோசித்த
போதிலும் இறுதியான
ஒரு முடிவு
எட்டப்படவில்லை என பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
குறித்த
கலந்துரையாடலில் பதவிகளை இராஜினாமா செய்த அனைத்து
முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment