சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள்
தீவிர தாக்குதல்
பொதுமக்கள் உட்பட 135 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு!
ஐ.எஸ். தீவிரவாதிகள், குண்டுகளை வீசியும், இயந்திர துப்பாக்கிகளால்
சுட்டும் நடத்திய தீவிர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 85 பேரும், சிரியா இராணுவப்படை
மற்றும் ஜனாதிபதியின் ஆதரவாளர் படைகளை சேர்ந்த 50 பேரும் என 135 பேர் பலியானதாகவும்,
நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் டெய்ர் எஸர் நகரின்மீது நடத்திய தாக்குதலில் இவ்வாறு 135 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கோரக்காட்சியை நேரில் பார்த்த சிலர் பலி எண்ணிக்கை இருநூறை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment