2 மணித்தியாலங்களை பேஸ்புக்கிற்காக செலவிடும்
60 வீதமான அரச ஊழியர்கள்
ஆய்வில் தகவல்!
இலங்கையின்
அரச அலுவலகங்களில்
60 வீதமான ஊழியர்கள்
நாளாந்தம் தங்கள்
பணிநேரத்தில் இரண்டு மணித்தியாலங்களை முகப்புத்தகத்தில் செலவிடுவது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கையை
மையமாகக் கொண்ட
தொழிற்சங்கமொன்று கடந்த மூன்று மாதங்களாக இந்த
ஆய்வினை மேற்கொண்டது.
சுமார்
350 அரசதுறை அலுவலகங்களில் இந்த ஆய்வு இடம்பெற்றது.
இதன்போதே சுமார்
60 வீதமான அரசாங்க
ஊழியர்கள் தங்கள்
கையடக்க தொலைபேசிகள்
மூலமாக
முகப்புத்தங்களை பார்ப்பதற்கு நாளாந்தம்
தங்கள் பணிநேரத்தில்
இரண்டு மணித்தியாலங்களை
முகப்புத்தகத்தில் செலவிடுவது தெரியவந்துள்ளது.
இந்தஆய்வு குறித்து
பிரதமர் மற்றும்
ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment