4-வது ஒரு நாள் போட்டியிலும்
இந்தியா அபார வெற்றி
இலங்கைக்கு
எதிராக கொல்கத்தாவில்
நடைபெற்ற நான்காவது
ஒருநாள் போட்டியிலும்
இந்தியா அபார
வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணியை
153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, தொடர்ச்சியாக
4 போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக
டாஸ் வென்ற
இந்திய கேப்டன்
விராட் கோலி
பேட்டிங் செய்ய
தீர்மானித்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி,
ரோகித் சர்மாவின்
அசுர ஆட்டத்தில்
404 ஓட்டங்களை குவித்தது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில்
அதிக ஓட்டங்கள்
குவித்த வீரர்
மற்றும் இருமுறை
இரட்டை சதம்
விளாசிய வீரர்
என்று அடுத்தடுத்து
உலகசாதனைகள் படைத்த ரோகித் சர்மா, 173 பந்துகளில்
264 ஓட்டங்களை குவித்தார். இறுதியாக கடைசி பந்தில்
ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில்
இந்தியா 5 விக்கெட்டுகளை
இழந்து 404 ஓட்டங்களை
குவித்தது.
பின்னர்
405 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய
இலக்குடன் களமிறங்கிய
இலங்கை அணி
43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்கள்
மட்டுமே எடுத்து
தோல்வியை தழுவியது.
0 comments:
Post a Comment