முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற 

பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன் சேவையினை

தரமிக்கதாக விருத்தி செய்தல் தொடர்பாக

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் யோசனைகளுக்கு

அமைச்சரவை அங்கீகாரம்


முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன் சேவையினை தரமிக்கதாக விருத்தி செய்வதற்காக கட்டுப்பாட்டு அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்கு 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

குறித்த முன்மொழிவினை செயற்படுத்தும் வகையில் அது தொடர்பில் ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவென அமைச்சின் செயலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top