உலகக் கிண்ணக்
கிரிக்கெட் போட்டி 2015
பாகிஸ்தானுக்கு
301 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
உலகக்
கிண்ணக் கிரிக்கெட்டில்
இன்று அடிலெய்டில்
நடைபெறும் முக்கியத்துவம்
வாய்ந்த லீக்
ஆட்டத்தில் (‘பி’ பிரிவு) பரம எதிரிகளான
இந்தியாவும், பாகிஸ்தானும் கோதாவில் இறங்கியுள்ளன. உலகம்
முழுவதும் அதிகமானோர்
பார்க்கும் கிரிக்கெட் மோதலாக இது இருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுவதால்
ரசிகர்கள் பேராவலுடன்
போட்டியை பார்த்து
வருகின்றனர். மைதானத்திற்கு வெளியேவும் இந்தியா - பாகிஸ்தான்
அணிகளின் ரசிகர்கள்
குவிந்துள்ளனர். போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற
இந்திய அணி
துடுப்பாட்டத்தை தேர்வு செய்து விளையாடியது.
இந்திய
அணி 50 ஓவர்
முடிவில் 7 விக்கெட் இழந்து 300 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
301 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் பாகிஸ்தான்
அணி களமிறங்க
உள்ளது.
0 comments:
Post a Comment